முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

முஸ்லீம்களுக்கு இட ஒதுக்கீடு சமுதாய மோதலை ஏற்படுத்தும்

சனிக்கிழமை, 31 டிசம்பர் 2011      இந்தியா
Image Unavailable

 

லக்னோ,டிச.31 - முஸ்லீம்களுக்கு இட ஒதுக்கீடு செய்வது சமுதாய மோதலை ஏற்படுத்தும் என்று பாரதிய ஜனதா மூத்த தலைவர்களில் ஒருவரான முரளி மனோகர் ஜோஷி கருத்து தெரிவித்துள்ளார். இதர பிற்படுத்தப்பட்டோர்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள 27 சதவீத இடஒதுக்கீட்டில் உள் ஒதுக்கீடாக முஸ்லீம் மதத்தை சேர்ந்த பிற்படுத்தப்பட்டோர்களுக்கு 4.5 சதவீத இடஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதற்கு முரளி மனோகர் ஜோஷி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். முஸ்லீம்களுக்கு இடஒதுக்கீடு செய்யப்பட்டிருப்பது இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்களை பாதிக்கும். அவர்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டிருப்பதில் இருந்துதான் முஸ்லீம் மதத்தை சேர்ந்த பிற்படுத்தப்பட்டோர்களுக்கு ஒதுக்கீடு செய்ய வேண்டும். இதனால் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்புகளை சேர்ந்தவர்களுக்கு பெரும் இழுப்பு ஏற்படும் என்று லக்னோவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் தெரிவித்தார். இந்த ஒதுக்கீடு இதோடு நின்றுவிடாது. இது தொடர்ந்து கொண்டே இருக்கும். அடுத்து பாராளுமன்றம் மற்றும் சட்டமன்றங்களில் மதம் ரீதியாக இட ஒதுக்கீடு செய்ய கோரிக்கை எழும். வகுப்பு கலவரத்திற்கு மத்திய அரசு விதை விதைத்துள்ளது. இதுதான் நாடு பிரிவினைக்கு அடிப்படை காரணமாகும். அனைத்து வகுப்பினர்களும் சமத்துவமாக இருக்க வேண்டும் என்பதில் பாரதிய ஜனதாவுக்கு எந்தவித எதிர்ப்போ அல்லது கருத்துவேறுபாடோ இல்லை. அதேசமயத்தில் இட ஒதுக்கீட்டை ஒருவருக்கு கொடுத்துவிட்டு அதில் இருந்து மற்றவர்களுக்கு கொடுக்கும் மத்திய அரசின் இந்த முன்னூதாரணம் பலதரப்பட்ட சமுதாயத்தினர்களிடையே இணக்கம் ஏற்பட காலதாமதமாகும். இதர பிற்படுத்தப்பட்டவர்களுக்கு ஒதுக்கீடு செய்வதில் இருந்து உள்ஒதுக்கீடு செய்வதை முஸ்லீம் மக்களும் எதிர்க்க வேண்டும் என்று ஜோஷி கேட்டுக்கொண்டார். 

உத்திரப்பிரதேசம் உள்பட 5 மாநிலங்களில் சட்டசபை தேர்தல் நடக்க உள்ளது. இதில் முஸ்லீம்களின் ஓட்டுக்களை பெறுவதற்காக மத்தியில் உள்ள காங்கிரஸ் யோசிக்காமல் அவசரம் அவசரமாக உள்ஒதுக்கீட்டை அறிவித்துள்ளது என்று ஜோஷி குற்றஞ்சாட்டினார். தங்களுடைய சுயநலத்திற்காக பயன்படுத்தப்படுவதை முஸ்லீம்கள் ஒருபோதும் அனுமதிக்கக்கூடாது என்றும் ஜோஷி கேட்டுக்கொண்டார். வருகின்ற 2-ம் தேதி பாரதிய ஜனதா கட்சியின் பார்லிமெண்டரி பிரிவு கூட்டம் நடைபெறுகிறது அப்போது உத்திரப்பிரதேச மாநில சட்டசபை தேர்தலில் போட்டியிடும் பா.ஜ. வேட்பாளர்கள் பட்டியல் இறுதி செய்யப்படும் என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்