முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஜனவரி 2-ல் சென்னை வருகிறார் ஜனாதிபதி பிரதீபா

சனிக்கிழமை, 31 டிசம்பர் 2011      இந்தியா
Image Unavailable

சென்னை, டிச. 31 - ஜனவரி 2 ம் தேதி ஜனாதிபதி பிரதீபா பாட்டீல் சென்னைக்கு வருகிறார். ஹரிகோட்டா இஸ்ரோ மையத்தில் ஜனவரி 2 ம் தேதி நடைபெறும் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக ஜனாதிபதி பிரதீபா பாட்டீல் அன்றைய தினம் காலை டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் சென்னை விமான நிலையத்துக்கு வருகிறார். பின்னர் அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் ஸ்ரீஹரிகோட்டா செல்கிறார். அதைத் தொடர்ந்து அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் அன்று இரவு 7 மணிக்கு சென்னைக்கு திரும்புகிறார். சென்னை விமான நிலையத்துக்கு 7.30 மணிக்கு வரும் ஜனாதிபதி, அங்கிருந்து விமானம் மூலம் டெல்லிக்கு புறப்பட்டு செல்கிறார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!