முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

லோக்பால் நிறை வேறாமலேயே மாநிலங்களவை ஒத்திவைப்பு

சனிக்கிழமை, 31 டிசம்பர் 2011      அரசியல்
Image Unavailable

 

புது டெல்லி, டிச. 31 - லோக்பால் மசோதா நிறைவேற்றப்படாமலேயே மாநிலங்களவை காலவரையின்றி ஒத்தி வைக்கப்பட்டது. மசோதா மீது நேற்று முன்தினம் நடைபெற்ற விவாதம் நள்ளிரவு 12 மணி வரை நீடித்தது. இந்த காலவரையறைக்குள் மசோதா மீது வாக்கெடுப்பு நடத்தப்பட்டிருக்க வேண்டும். ஆனால் ஆளும் கூட்டணிக்கும், எதிர்க்கட்சிகளுக்கும் இடையே கருத்து வேறுபாடு வலுத்ததால் வாக்கெடுப்பு நடத்தாமல் அவை முடிந்தது. மாநிலங்களவையில் ஆளும் கூட்டணிக்கு 91 உறுப்பினர்கள் பலம் மட்டுமே இருந்தது. மசோதாவை நிறைவேற்ற 122 உறுப்பினர்களின் ஆதரவு தேவை. 

இந்நிலையில் தங்களது திருத்தங்களை ஏற்றால் மட்டுமே மசோதாவை ஆதரிப்போம் என்று பா.ஜ.க உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் திட்டவட்டமாக அறிவித்தன. ஆனால் மசோதாவை இப்போதைய வடிவிலேயே நிறைவேற்ற வேண்டும். திருத்தங்களை பின்னர் மேற்கொள்ளலாம் என்று அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. ஆளும் கட்சியினரும், எதிர்க்கட்சியினரும் தொடர்ந்து கோஷமிட்டதால் அவையில் கூச்சல் குழப்பம் ஏற்பட்டது. மசோதாவை நிறைவேற்ற முடியாது என்பதால் கூச்சல், குழப்பத்தை ஏற்படுத்தி அவையில் இருந்து ஆளும் கட்சி ஓடி ஒளிகிறது என்று மாநிலங்களவை எதிர்க்கட்சி தலைவர் அருண்ஜெட்லி குற்றம் சாட்டினார். இரவு எவ்வளவு நேரமானாலும் அவையில் இருந்து வாக்களிக்க தயாராக இருக்கிறோம். இதற்கு பிரதமர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார். 

ஆனால் பிரதமர் தரப்பில் எந்த பதிலும் தெரிவிக்கப்படவில்லை. ஆளும் கட்சி எம்.பிக்கள் தொடர்ந்து கோஷம் எழுப்பிக் கொண்டிருந்தனர். இந்த கூச்சல் குழப்பத்துக்கு இடையே நள்ளிரவு 12 மணஇயை தாண்டி அவையின் நேரம் முடிந்ததால் காலவரையின்றி ஒத்தி வைப்பதாக அவைத் தலைவர் ஹமீது அன்சாரி அறிவித்தார். முன்னதாக, நள்ளிரவில் விவாதம் நடைபெற்றுக் கொண்டிருந்த போது ராஷ்டிரிய ஜனதா தள கட்சியை சேர்ந்த ராஜ்நீதி பிரசாத், இணையமைச்சர் நாராயணசாமியின் மேஜையில் இருந்த ஆவணங்களை எடுத்து கிழித்தெறிந்தார். இதைத் தொடர்ந்து அவை 15 நிமிடங்கள் ஒத்தி வைக்கப்பட்டு மீண்டும் கூடியது. 

முன்னதாக, மாநிலங்களவை காலையில் கூடியதும் நாடாளுமன்ற விவகார துறை இணையமைச்சர் நாராயணசாமி லோக்பால் மசோதாவை அறிமுகம் செய்து வைத்துப் பேசினார். மசோதாவுக்கு ஆளும் கூட்டணியை சேர்ந்த திரிணாமுல் காங்கிரஸ், பா.ஜ.க உள்ளிட்ட கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. லோக்பால் மசோதாவில் இருந்து லோக்ஆயுக்தா பிரிவை முற்றிலுமாக நீக்க வேண்டும் என்பதில் திரிணாமுல் காங்கிரஸ் பிடிவாதமாக இருந்தது. இதனால் ஆளும் கூட்டணிக்குள்ளேயே குழப்பம் ஏற்பட்டது. பா.ஜ.க. சார்பில் 24 திருத்தங்களும், திரிணாமுல் காங்கிரஸ் சார்பில் 37 திருத்தங்களும் பரிந்துரைக்கப்பட்டன. இதர கட்சிகள் சார்பில் நூற்றுக்கும் மேற்பட்ட திருத்தங்கள் வலியுறுத்தப்பட்டன. ஆக மொத்தத்தில் லோக்பால் மசோதா நிறைவேற்றப்படாமலேயே மாநிலங்களவை காலவரையின்றி ஒத்தி வைக்கப்பட்டது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago