முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பொங்கல் பண்டிகைக்கு சென்னையில் 1000 சிறப்பு பஸ்கள்

செவ்வாய்க்கிழமை, 3 ஜனவரி 2012      தமிழகம்
Image Unavailable

சென்னை, ஜன.- 3 - பொங்கல் பண்டிகைக்காக சென்னையில் இருந்து வெளியூர்களுக்குசெல்ல 1000 சிறப்பு பஸ்கள் இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.  பொங்கல் பண்டிகை கொண்டாட்டம் 14- ந்தேதி முதல் 16- ந் தேதிவரை நடைபெறுகிறது. பொங்கல் திருநாளை கொண்டாட சென்னையில் இருப்போர் சொந்த ஊர்களுக்கு செல்வது வழக்கம். சென்னையில் இருந்து வெளியூர்களுக்கு செல்பவர்கள் பஸ், ரெயில்களில் முன் பதிவு செய்து விட்டனர். வழக்கமான ரெயில்கள் தவிர சிறப்பு ரெயில்களும் நிரம்பி விட்டன. அரசு போக்குவரத்து கழக பஸ்களிலும் இடமில்லை. ஆன் லைன் மூலமும் நேரிலும் முன் பதிவு செய்தனர். இதனால் 2000 அரசு போக்குவரத்து கழக பஸ்களுக்கு முன் பதிவு முடிந்து விட்டது. nullநீண்ட தூரம் செல்லக்கூடிய அரசு விரைவு போக்குவரத்து கழக பஸ்கள் 880, சேலம், விழுப்புரம், கோவை, மதுரை, கும்பகோணம், போக்குவரத்து கழக பஸ்களுக்கும் ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்யும் வசதி இருப்பதால் 20 நாட்களுக்கு முன்பிருந்து ரிசர்வேஷன் செய்ய தொடங்கினர். இதற்காக கோயம்பேடு பஸ் நிலையத்தில் சிறப்பு கவுண்டர்கள் திறக்கப்பட்டு இருந்தன. அதன் மூலம் நேரிலும் சென்று ஏராளமான பயணிகள் டிக்கெட் முன்பதிவு செய்தனர். அரசு பஸ்களின் முன்பதிவு பெரும்பாலும் முடிந்து விட்டதால் கடைசி நேர நெரிசலை சமாளிக்க சிறப்பு பஸ்களை இயக்க போக்குவரத்து கழகம் திட்டமிட்டுள்ளது. 7 போக்குவரத்து கழகம் சார்பிலும் பல்வேறு பகுதிகளுக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன. 12 மற்றும் 13-​ந்தேதியில் கூட்டம் அதிகமாக இருக்கும் என்பதால் அன்றைய தினம் சுமார் 1000 சிறப்பு பஸ்கள் கோயம்பேட்டில் இருந்து இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து போக்குவரத்து கழக அதிகாரி ஒருவர் கூறியதாவது: பொங்கல் பண்டிகைக்கான முன் பதிவு 12 மற்றும் 13-​ந் தேதிக்கு முடிந்து விட்டது. அதனால் சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன. அரசு விரைவு போக்குவரத்து கழகம் சார்பில் வழக்கமான 880 பஸ்கள் நிரம்பி விட்டதால் 100 சிறப்பு பஸ்கள் இயக்கப்படும். விழுப்புரம், போக்குவரத்து கழகம் சார்பில் 500 சிறப்பு பஸ்களும், இதர போக்குவரத்து கழகத்தில் இருந்து 400 சிறப்பு பஸ்களும் இயக்கப்படுகிறது.   சென்னையில் இருந்து நெல்லை, தூத்துக்குடி, மதுரை, திருச்சி, நாகர்கோவில், கும்பகோணம், தஞ்சாவூர், நாகப்பட்டினம், சேலம், கோயம்புத்தூர் உள்ளிட்ட எல்லா பகுதிகளுக்கும் சிறப்பு பஸ்கள் விடப்படுகிறது. கடைசி நேர கூட்டத்தை சமாளிக்க கோயம்பேடு பஸ் நிலையத்தில் விரிவான ஏற்பாடுகள் பயணிகளுக்கு செய்யப்படுகிறது. சிறப்பு பஸ்களில் செல்ல விரும்புவோர் கோயம்பேடு பஸ் நிலையத்தில் அன்றைய தினம் ரூ.10 செலுத்தி டோக்கன் பெற்றுக் கொள்ளவேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்