Idhayam Matrimony

பிரபல நடன ஆசிரியர் கே.ஜெ.சரசா மாரடைப்பில் மரணம்

செவ்வாய்க்கிழமை, 3 ஜனவரி 2012      தமிழகம்
Image Unavailable

சென்னை, ஜன.- 3 - பிரபல நடன ஆசிரியர் கே.ஜெ.சரசா திடீர் மாரடைப்பில் இன்று அதிகாலை தனியார் மருத்துவமனையில் மரணமடைந்தார்.அவருக்கு வயது72.மந்தவெளியில் சரசாலயா என்னும் பெயரில் நாட்டிய பள்ளியை நடத்தி வந்தவர் கே.ஜெ.சரசா.முதல்வர் ஜெயலலிதாவின் நாட்டிய குரு இவர். இதேபோல கமலஹாசன், டான்ஸ் மாஸ்டர் ரகுராம், ஷோபனா, சொர்ண மால்யா, ஊர்மிளா சத்யநாராயணன் ரத்னகுமார் மற்றும் நாவலாசிரியர் சிவசங்கரி உள்ளிட்ட பிரபலங்கள் இவரிடம் நடனம் பயின்றுள்ளார்கள்.நாட்டியமே மூச்சாச வாழ்ந்தவர் கே.ஜெ.சரசா. வழுவூர் பாணியில் நாட்டியம் சொல்லிக் கொடுத்தவர். 1000-க்கும் மேற்பட்ட அரங்கேற்றங்களை நடத்திய ஆபூர்வ நாட்டிய கலைஞர். பெண் நட்டுவனராக மேடை ஏறிய முதல் கலைஞர் இவரே என்பது குறிப்பிடத்தக்கது. வைஜெயந்தி மாலா, பேபி கமலா, லலிதா - பத்மினி - ராகினி சகோதரிகள் உள்ளிட்ட பிரபலங்கஙளுக்கு நட்டுவாங்கம்செய்திருப்பவர். 1960-ம் ஆண்டு சரசாலயா என்னும் பெயரில் நாட்டிய பள்ளியை துவக்கினார். கடைசி வரை நாட்டியமே மூச்சாக வாழ்ந்தார் இவரை மாதிரி ஒரு குரு கிடைப்பதே அபூர்வம் என்று அனைத்து தரப்பினாரலும் வெகுராகப் பாரட்டப்பட்டவர். நாதஸ்வரக் கலைஞர் ஜெகதீசன் பிள்ளையின் மகள், ஆரம்பக் கட்டத்தில் காரைக்காலில் இருந்தார். முத்துக்குமாரப் பிள்ளையிடம் ஆரம்பத்தில் நாட்டியம் பயின்றவர், மேற் கொண்டு வழுவூர் ராமையா பிள்ளையிடம் பயின்றார்.பின்னர் சென்னைக்கு வந்து ராமையா பிள்ளையிடம் குருகுல வாசம் ஸ்டைலில் 10 ஆண்டுகள் நாட்டியம் கற்றார். அதன்பின்னர் நாட்டியத்துக்காகவே தன் வாழ்க்கையை அர்ப்பணித்தார். ஆங்கிலப் பத்திரிகை ஒன்றுக்கு அளித்த ஒரு விசேஷ பேட்டியில், நாட்டியம்.., நாட்டியம்... நாட்டியம் அதைத்தவிர வேறு எதுவும் எனக்கு தெரியாது என்று கூறியிருந்தார். சரசா டீச்சர் என்று மாணவிகளால் அன்போடு அழைக்கப்பட்டவர். நாட்டியம் பயின்றவர், ஆட விரும்பினார். ஆனால் வாழ்க்கை முழுவதும் நீ சொல்லிக் கொடுத்துக் கொண்டே தான் இருக்க வேண்டும். காலில் சலங்கை கட்டி ஆடக்கூடாது என்று குரு கட்டளையிட்டர். அதை அப்படியே ஏற்று நட்டுவாங்கம் செய்வதோடு மட்டும் நின்றார். தான் ஆடவில்லையே... என்று ஒருபோதும் வருத்தப்பட்டதில்லை. குரு சொன்னது சரிதான்... அவர் பேச்சைக் கேட்டு அதன்படி நடப்பேன் என்று சொல்லி அப்படியே வாழ்ந்து காட்டியவர். இவர் சிறு வயதாக இருக்கும் போது தந்தை இறந்து விட்டார். அதனால் நாட்டியம் பயிற்றுவித்து குடும்பத்தைக் காப்பாற்றும் பொறுப்பு இவர் தலையில் விழுந்தது. 4 சகோதரிகளையும் தன்னுடன் வைத்துக் கொண்டார். இசை - நாட்டியத்தில் ஆர்வம். கிருஷ்ண பாரிஜாதம், ஆதித்ய ஹ்ருதயம், சிலப்பதிகாரம், குன்றக்குடி குறவஞ்சி, தேசபக்தி, குற்றாலக் குறவஞ்சி ஆகிய இவரது படைப்புகள். மக்கள் மத்தியில் தனி வரவேற்பை பெற்றவை. கலைமாமணி, சொர்ணகமலம் விருது உள்ளிட்ட பல்வேறு விருதுகளை பெற்றவர். மத்திய அரசின் சங்கீத நாடக அகாடமி விருது பெற்றவர். திருமணமாகாத இவர், தங்கை கீதாவின் மகள் ராஜலட்சுமியை சுவீகாரமாக தத்தெடுத்துக் கொண்டார். இவர் இயக்குனர் வெங்கட்பிரபுவின் மனைவி. கே.ஜெ.சரசாவின் உடல் இன்று பெசன்ட் நகரில் தகனம் செய்யப்படும்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்