முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நிவாரண உதவிகளை நேரில் வழங்க இன்று ஜெயலலிதா கடலூர் செல்கிறார்

செவ்வாய்க்கிழமை, 3 ஜனவரி 2012      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, டிச.- 4 - தானே புயல் பாதிப்பை சீர் செய்ய மொத்தம் ரூ.800 கோடி நிதி உதவிக்கு முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். நிவாவண உதவிகளை நேரில் வழங்க இன்று முதல்வர் ஜெயலலிதா கடலூர் செல்கிறார். இதுகுறித்து முதல்வர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- 30.12.2011 அன்று காலை 6.30 மணிக்கு, தானே புயல் புதுச்சேரிக்கும் கடலூருக்கும் இடையே கரையை கடந்து, கடலூர் மாவட்டத்திற்கு மிகப் பெரிய பாதிப்பினை ஏற்படுத்தியது.  தானே புயல் தமிழகத்தை தாக்கும் என்று வானிலை ஆராய்ச்சி நிலையம் அறிவித்த உடனேயே, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ளுமாறு கடலோர மாவட்ட ஆட்சித் தலைவர்களுக்கும், சம்பந்தப்பட்ட துறைகளுக்கும் நான் உத்தரவிட்டேன். இதனைத் தொடர்ந்து,  மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கை அறிவிப்பு வெளியிடப்பட்டது.  இது மட்டுமல்லாமல், 6,000-​க்கும் மேற்பட்ட மக்கள் பாதுகாப்பு மையங்களுக்கு கொண்டு செல்லப்பட்டனர். இதன் விளைவாக உயிர்ச் சேதங்கள் பெருமளவிற்கு தவிர்க்கப்பட்டன.  புயலால் ஏற்பட்டுள்ள சேதங்கள் மற்றும் போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ளப்பட வேண்டிய நிவாரண ஏற்பாடுகள் குறித்து புயல் தாக்கிய அன்றைய தினமே (30.12.2011) எனது தலைமையில் ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. இந்த ஆய்வுக் கூட்டத்தினையடுத்து, உடனடி நிவாரணப் பணிகள் மற்றும் அடிப்படைக் கட்டமைப்பு வசதிகளை சீரமைத்திட 150 கோடி ரூபாயினை விடுவித்து நான் ஆணையிட்டதோடு, நிவாரணப் பணிகளை மேற்பார்வையிடும் வகையில், பாதிக்கப்பட்ட மாவட்டங்களுக்கு அமைச்சர்களையும், உயர் அதிகாரிகளையும்  அனுப்பி வைத்தேன். நிவாரணப் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன. 6 மூத்த இந்திய ஆட்சிப் பணி அதிகாரிகள், 11 துணை ஆட்சியர்கள் மற்றும் 4 வளர்ச்சி திட்ட அதிகாரிகள் முகாமிட்டு நிவாரணப் பணிகளை மேற்பார்வையிட்டு வருகின்றனர்.  இந்தக் கடுமையான தானே புயலின் தாக்குதல் காரணமாக கடலூர் மற்றும் விழுப்புரம் மாவட்டங்களில் 35 பாதுகாப்பு மையங்கள் ஏற்படுத்தப்பட்டு, அதில் 6,000 பேர் தங்க வைக்கப்பட்டனர்.  அவர்களுக்கு தேவையான உணவு மற்றும் குடிநீnullர் வழங்கப்பட்டன.  நான் ஏற்கெனவே அறிவித்தபடி, இந்த பாதுகாப்பு மையங்களில் தங்க வைக்கப்பட்ட குடும்பங்கள் ஒவ்வொன்றிற்கும் 1,000 ரூபாய் வீதம் நிவாரண உதவி வழங்கப்பட்டு வருகிறது. இது மட்டுமல்லாமல், ஒவ்வொரு குடும்பத்திற்கும் 10 கிலோ அரிசி, ஒரு வேட்டி, ஒரு சேலை, மற்றும் ஒரு லிட்டர் மண்ணெண்ணெய் ஆகியவையும் வழங்கப்பட்டு வருகின்றன.   இது தவிர, மின்சார பாதிப்புக்குள்ளாகிய பகுதிகளில் மெழுகுவர்த்திகள் வழங்கப்பட்டன. 

கடலூர் மற்றும் விழுப்புரம் மாவட்டங்களில்  ஏறத்தாழ 3.5 லட்சம் குடிசை மற்றும் ஓடு வேய்ந்த வீடுகள் பகுதியாகவும், முழுமையாகவும் சேதமடைந்துள்ளன. பகுதியாக பாதிக்கப்பட்டுள்ள குடிசைகளுக்கு நிவாரண உதவியாக தலா 2,500 ரூபாயும், முழுமையாக பாதிக்கப்பட்டுள்ள குடிசை மற்றும்  ஓடுகளை இழந்த வீடுகளுக்கு தலா 5,000 ரூபாயும்  எனது ஆணையின்படி வழங்கப்பட்டு வருகின்றன. இதற்கென 114 கோடி ரூபாய் அரசுக்கு செலவு ஏற்படும். மத்திய அரசின் பேரிட நிவாரண வரையறையின்படி, சேதம் அடைந்த குடிசைகளுக்கு 2,000 ரூபாய் வழங்கப்பட வேண்டும் என்று இருந்தாலும், மேலே குறிப்பிட்டபடி கூடுதல் நிவாரணத் தொகைகள் எனது அரசால் வழங்கப்பட்டு வருகின்றன.  இந்த நிவாரண உதவிகளை உடனடியாக வழங்குவதற்காக, பிற மாவட்டங்களிலிருந்து 100 வட்டாட்சியர் மற்றும் துணை வட்டாட்சியர்கள் வரவழைக்கப்பட்டுள்ளனர்.இந்த நிவாரண உதவிகளை 5.1.2012-​க்குள் வழங்கும்படி நான் உத்தரவிட்டுள்ளேன்.  தானே புயல் காரணமாக, கடலூர் மாவட்டத்திலுள்ள 5 நகராட்சிகளில் உள்ள 174 வார்டுகளிலும் குடிநீnullர் விநியோகம் முற்றிலும் பாதிக்கப்பட்டது. அதில், 122 வார்டுகளில் குடிநீnullர் விநியோகம் தற்போது சீரமைக்கப்பட்டு, குழாய் மூலம் குடிநீnullர் வழங்கப்பட்டு வருகிறது. இதுவன்றி, 57 லாரிகள் மூலம் மீதமுள்ள 52 வார்டுகளுக்கு குடிநீnullர் விநியோகிக்கப்பட்டு வருகிறது.  நகராட்சிகளில் 74 விழுக்காடு அளவுக்கு தற்போது குடிநீnullர் வழங்கப்பட்டு வருகிறது.  இன்னும் இரண்டொரு நாட்களில் குடிநீnullர் விநியோகம் முற்றிலும் சீரமைக்கப்படும். கடலூர் மாவட்டத்திலுள்ள 16 பேரூராட்சிகளிலும் ஜெனரேட்டர் மூலம் குடிநீnullர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. பெரும்பாலான பேரூராட்சிகளில் முழு அளவு குடிநீnullர் வழங்கப்பட்டு வருகிறது. ஒருசில பேரூராட்சிகளில் மட்டும் சுமார் 40 முதல் 50 விழுக்காடு அளவுக்கு குடிநீnullர் வழங்கப்பட்டு வருகிறது.  இந்தப் பேரூராட்சிகளிலும் ஓரிரு நாட்களில் முழு அளவு குடிnullநீர் வழங்கப்பட்டுவிடும். கிராமப் பகுதிகளைப் பொறுத்தவரையில், கடலூர் மாவட்டத்தில் 11 கூட்டுக் குடிநீnullர்த் திட்டங்கள் உள்ளன.  இதில் 5 கூட்டுக் குடிநீnullர்த் திட்டங்களுக்கு மின் வசதி சீரமைக்கப்பட்டு குடிநீnullர் வழங்கப்பட்டு வருகிறது.  எஞ்சிய 6 கூட்டுக் குடிநீnullர்த் திட்டங்களில் ஜெனரேட்டர் மூலம் குடிநீnullர் விநியோகிக்கப்பட்டு வருகிறது.  மேலும், 309 ஜெனரேட்டர்கள் வாடகைக்கு பெறப்பட்டு அதன் மூலமும், 127 தண்ணீர் லாரிகள் மூலமும் ஊரகப் பகுதிகளுக்கு குடிநீnullர் வழங்கப்பட்டு வருகிறது.  ஊரகப் பகுதிகளில் குடிநீnullர் வழங்குவதைக் கண்காணிக்க, ஊரக வளர்ச்சித் துறை ஆணையர் தலைமையில் 8 அதிகாரிகள் அனுப்பப்பட்டு பணிகளை மேற்பார்வையிட்டு வருகின்றனர். குடிநீnullர் விநியோகத்திற்கென 50 கோடி ரூபாய் நிதி வழங்கப்படும். 

தானே புயல் தாக்குதல் காரணமாக, கடலூர் மாவட்டத்தில் 27 உயர் அழுத்த மின் கோபுரங்கள், 4,500 விநியோக மின்மாற்றிகள், 36,000 மின் கம்பங்கள், 350 கிலோ மீட்டர் nullநீளத்திற்கான மின் கம்பிகள் சேதமடைந்துள்ளன. இவற்றை போர்க்கால அடிப்படையில் சீர்செய்ய நான் உத்தரவிட்டதன் அடிப்படையில், கடலூர், பண்ருட்டி, நெல்லிக்குப்பம் ஆகிய இடங்களில் 50 விழுக்காடு அளவிற்கும், விருத்தாசலம், சிதம்பரம் நகரங்களில் 90 விழுக்காடு அளவிற்கும் மின் விநியோகம் சீர் செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாடு மின்சார வாரியம் 1,000 பணியாளர்களை மற்ற மாவட்டங்களிலிருந்து அனுப்பி, கடலூர் மாவட்டத்தில் மின் விநியோகத்தை சீர் செய்ய நடவடிக்கை எடுத்துள்ளது. 5.1.2012-​க்குள் அனைத்து நகராட்சி மற்றும் பேரூராட்சிகளில் மின் விநியோகம் சீர்செய்யப்பட்டுவிடும். இந்த மின் சீரமைப்புப் பணிகளை உடனடியாக மேற்கொள்ளும் வகையில், தமிழ்நாடு மின்சார வாரியத்திற்கு 300 கோடி ரூபாய் நிதி உதவியை உடனடியாக வழங்க நான் ஆணையிட்டுள்ளேன். 

தானே புயல் தாக்குதல் காரணமாக, கடலூர் மாவட்டத்தில் 58,000 ஹெக்டேர் பரப்பளவில் பயிரிடப்பட்டிருந்த நெற்பயிர்களும், 23,500 ஹெக்டேர் பரப்பளவில் பயிரிடப்பட்டிருந்த முந்திரி பயிர்களும், 5,752 ஹெக்டேர் பரப்பளவில் பயிரிடப்பட்டிருந்த  கரும்பு பயிர்களும், 8,947 ஹெக்டேர் பரப்பளவில் பயிரிடப்பட்டிருந்த வாழை, பயறு, பருத்தி, எண்ணெய் வகைகள் மற்றும் பலா மரங்கள் போன்றவையும் சேதம் அடைந்துள்ளன.  விழுப்புரம், நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களையும் சேர்த்து சுமார் 2 லட்சம் ஹெக்டேர் பரப்பளவுக்கு பயிர் சேதம் ஏற்பட்டுள்ளது. நெல் மற்றும் நீnullர்ப்பாசனம் பெறும் பயிர்களுக்கு ஹெக்டேருக்கு 4,000 ரூபாயும், பலா, முந்திரி போன்ற நிரந்தரப் பயிர்களுக்கு ஹெக்டேருக்கு 6,000 ரூபாயும் நிவாரணமாக வழங்கப்பட மத்திய அரசின் பேரிட நிவாரண வரையறையில் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.  எனினும்,  நெற் பயிருக்கு ஹெக்டேர் ஒன்றுக்கு 10,000 ரூபாயும், மற்ற நீnullர்ப்பாசன பயிர்களுக்கு ஹெக்டேர் ஒன்றுக்கு 7,500 ரூபாயும் நிவாரணம் வழங்க நான் ஆணையிட்டுள்ளேன்.  மேலும், பலா, முந்திரி போன்ற தோட்டப் பயிர்களுக்கு ஹெக்டேர் ஒன்றுக்கு 9,000 ரூபாய் என்றும் உயர்த்தி வழங்க நான் ஆணையிட்டுள்ளேன். பயிர் சேதங்களுக்காக மொத்தம் 166 கோடி ரூபாய் அளவுக்கு நிவாரணம் வழங்கப்படும். 

கடலூர் மாவட்டத்தில், சாதாரணமாக நாள் ஒன்றுக்கு 20,500 லிட்டர் பால் விநியோகிக்கப்படுகிறது.  எஞ்சிய பால் தேவை தனியார் பால் நிறுவனங்களால் நிறைவு செய்யப்பட்டு வந்தது. தானே புயல் காரணமாக, தனியார் நிறுவனங்கள் விநியோகம் செய்யும் பால் அளவை குறைத்துள்ளதால், கடலூர் மாவட்டத்தில் பால் பற்றாக்குறை ஏற்படுவதை தவிர்க்கும் பொருட்டு,  ஆவின் நிறுவனம் நாள் ஒன்றுக்கு 35,000 லிட்டர் பால் விநியோகம் செய்து வருகிறது.  2,500 லிட்டர் கொள்ளளவு கொண்ட இரண்டு குளிரூட்டும் வசதி செய்யப்பட்ட வாகனங்கள் சென்னையிலிருந்து கடலூருக்கு அனுப்பப்பட்டுள்ளன.  மேலும், சில்லறை அளவில் பால் விநியோகம் செய்வதற்காக, 9,000 லிட்டர் கொள்ளளவு கொண்ட நடமாடும் பால் டேங்கர் கடலூருக்கு அனுப்பப்பட்டு உள்ளது.  தானே  புயல் காரணமாக, கடலூர் மாவட்டத்தில், கட்டுமரங்கள், வல்லம்,  படகுகள், விசைப் படகுகள் போன்ற சுமார் 4,600 மீன்பிடி படகுகள் சேதமடைந்துள்ளன. முழுவதும் சேதமடைந்த பாரம்பரிய மீன்பிடி படகுகளுக்கு 7,500 ரூபாயும், பகுதி சேதமடைந்தவைகளுக்கு 2,500 ரூபாயும் வழங்குவதற்குத்தான் மத்திய அரசு வரையறை செய்துள்ளது.  எனினும், மீனவர்களின் நலனைக் கருத்தில் கொண்டு, இதனை தற்போது உயர்த்தி வழங்க நான் ஆணையிட்டுள்ளேன்.  இதன்படி, முழுவதும் சேதமடைந்த வலைகளுடன் கூடிய கட்டுமரங்களுக்கு 32,000 ரூபாயும், பகுதி சேதமடைந்த வலைகளுடன் கூடிய கட்டுமரங்களுக்கு 10,000 ரூபாயும், முழுவதும் சேதமடைந்த கு.சு.ஞ. படகுகள் மற்றும் வலைகளுக்கு 75,000 ரூபாயும், பகுதி சேதமடைந்த படகுகள் மற்றும் வலைகளுக்கு 20,000 ரூபாயும், முழுவதும் சேதமடைந்த விசைப் படகுகளுக்கு 5 லட்சம் ரூபாயும், பகுதி சேதமடைந்த விசைப் படகுகளுக்கு 3 லட்சம் ரூபாயும், வலைகள் மட்டுமே சேதம் அடைந்த இனங்களுக்கு 10,000 ரூபாயும் வழங்கப்படும்.  இதற்கென, 20 கோடி ரூபாய் நிதி வழங்கப்படும். 

 தானே   புயல் காரணமாக, 519 கால்நடைகள் மற்றும் 5,100 கோழிகள் இறந்துவிட்டன.  நான் ஏற்கெனவே உயர்த்தி வழங்க அறிவித்தபடி, மாடு ஒன்றுக்கு 20,000 ரூபாயும், ஆடு ஒன்றுக்கு 2,000 ரூபாயும், கோழி ஒன்றுக்கு 100 ரூபாயும்  நிவாரண உதவி வழங்கப்படும். தானே  புயல் காரணமாக, கடலூர் மாவட்டத்தில் பெரும்பாலான சாலைகளில் மரங்கள் விழுந்ததன் காரணமாக, 1,458 இடங்களில் சாலைப் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.  90 இயந்திரங்கள், 3 கிரேன்கள், 9 லாரிகள் ஆகியவற்றை பயன்படுத்தி சுமார் 1,000 பணியாளர்கள் மரங்களை அகற்றும் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.  இதன் காரணமாக 31.12.2011 அன்றே அனைத்து சாலைகளும் சீர் செய்யப்பட்டன. சாலைகளில் ஏற்பட்ட சேதங்களை தற்காலிகமாக சீர்செய்ய 150 கோடி ரூபாய் தேவைப்படுகிறது.  இதனை உடனடியாக வழங்க நான் ஆணையிட்டுள்ளேன்.

குடிசைகள் மற்றும் ஓட்டு வீடுகள் சேதத்திற்கு நிவாரண உதவியாக 114 கோடி ரூபாயும்; குடிnullர் விநியோகத்திற்காக 50 கோடி ரூபாயும்; மின் பணிகளை சீரமைக்கும் வகையில் தமிழ்நாடு மின்சார வாரியத்திற்காக 300 கோடி ரூபாயும்; பயிர் சேதங்களுக்காக 166 கோடி ரூபாயும்; மீன்பிடி படகுகள் சேதத்திற்கான நிவாரணத் தொகையாக 20 கோடி ரூபாயும்; சாலைகளின் தற்காலிக சீரமைப்பிற்காக 150 கோடி ரூபாயும்; உயிரிழப்பு, கால்நடை இழப்பு, பாதுகாப்பு மையங்களில் தங்க வைக்கப்பட்டது உட்பட பிற இனங்களுக்காக 50 கோடி ரூபாயும்; ஆக மொத்தம் 850 கோடி ரூபாய் நிதி வழங்க நான் உத்தரவிட்டுள்ளேன். இதில், தானே புயல் தாக்கிய அன்றே விடுவிக்கப்பட்ட 150 கோடி ரூபாய் போக, எஞ்சிய 700 கோடி ரூபாயை உடனடியாக வழங்க நான் ஆணையிட்டுள்ளேன்.

தானே புயலால் பாதிக்கப்பட்ட கடலூர் மாவட்டத்திற்கு 4.1.2012 அன்று நான் நேரில் சென்று நிவாரண உதவிகளை வழங்க உள்ளேன் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன். இதனைத் தொடர்ந்து, அமைச்சர் பெருமக்கள் கடலூர் மாவட்டத்திலேயே தங்கியிருந்து நிவாரண உதவிகளை  வழங்குவார்கள்.   

இவ்வாறு முதல்வர் ஜெயலலிதா தனது அறிக்கையில் கூறியுள்ளார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்