முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஜெயலலிதா ஆட்சியில் அமர்வார் - பிரபல ஜோதிடர் கணிப்பு

செவ்வாய்க்கிழமை, 15 மார்ச் 2011      தமிழகம்
Image Unavailable

 

திருச்சி, மார்ச்.15 - அ.தி.மு.க பொதுச்செயலாளர் ஜெ.ஜெயலலிதாவின் ஜாதக அமைப்பின்படி தற்பொழுது நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தலில் எதிரிகளை வென்று, ஜெயலலிதா ஆட்சியில் அமரும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாக திருச்சியைச்சேர்ந்த பிரபல ஜோதிடர் பி.ஆர்.என்.உதயகுமார் (செல்போன்:​9003730398) தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

14.04.2011 (வியாழக்கிழமை) சுக்லபட்சம் ஏகாதசி திதி மகம் நட்சத்திரம், கண்டம் நாமயோகம், பத்திரை கரணம் அமிர்தயோகம் கூடிய தினம், நண்பகல் 1 மணியளவில் சூர்ய உதயாதி 17.28 நாழிகை அளவில் கடக லக்கனம், துலா நவாம்சத்தில் சூரியன் மேஷ ராசியில் பிரவேசிக்கும் காலம், மங்களகரமான கர வருஷம் பிறக்கிறது. 

இந்த அமைப்பின்படி மகர நட்சத்திரத்தில் பிறந்த ஜெ.ஜெயலலிதாவின் ஜாதகயோக அமைப்பு மிக,மிக நல்ல முறையில் அமைந்துள்ளது. 

மாத பிறப்பு-சிம்மராசி, சுக்கிரன் 7-ல் இருந்து ராசியைப்பார்ப்பது, குரு ராசிக்கு 8-ல் மறைவது, அவர் லக்கனத்திற்கு பாதகாதி பதி மேல் மறைவது, கேது 11-ல் அமைவது, குரு-செவ்வாய் சேர்ந்து இருப்பது போன்ற இந்த அமைப்பின்படி ஜெ.ஜெயலலிதா நடைபெறவுள்ள தமிழக சட்டமன்ற தேர்தலில் வெற்றிபெற்று முதல்வராகும் வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. 

ஜெ.ஜெயலலிதாவின் ராசி, பிறந்ததேதி, ஜாதக அமைப்பில் உள்ள கிரக நிலை, தற்போதுள்ள கிரக அமைப்பின் காரணமாக சித்திரையில் எதிர் அரசியலில் நிலவும் குழப்ப நிலையால் எதையும் எதிர்கொண்டு வெற்றிபெற்று ஆட்சி கட்டிலில் அமர்ந்து பல சாதனைகள் செய்து உலக தமிழர்களால் போற்றப்படுவார்.இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!