முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கம்பம் நகரில் படிப்படியாக இயல்பு வாழ்க்கை திரும்பியது

புதன்கிழமை, 4 ஜனவரி 2012      தமிழகம்
Image Unavailable

கம்பம், ஜன.- 4 - முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தால் கடந்த மாதம் 5 ம் தேதி முதல் 29 நாட்களாக கம்பம் நகரில் இருந்து கேரளாவிற்கு இயக்கப்பட்ட அனைத்து பஸ்களும் அடியோடு நிறுத்தப்பட்டன. இதனால் கேரளாவுக்கு சரக்கு போக்குவரத்தும் அடியோடு நிறுத்தப்பட்டது. இதன் எதிரொலியாக கேரளாவில் அத்தியாவசியப் பொருட்களின் விலை தாறுமாறாக உயர்ந்தது. மேலும் தமிழகத்தில் இருந்து கேரளாவிற்கு பஸ் மற்றும் சரக்கு போக்குவரத்து இயக்கப்படாதா என்று கேரள மக்களும் ஏங்கினர். மேலும் தேனி மாவட்டத்தில் உள்ள விளை பொருட்களுக்கு சரியான விலை கிடைக்காததால் விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். இந்த நிலையில் கேரளாவிற்கு பஸ் போக்குவரத்து தொடங்குவதை இரு தரப்பினரும் எதிர்பார்த்து காத்திருந்தனர். இதையடுத்து நேற்று முன்தினம் கம்பம் நகரில் இருந்து குமுளி வரை தமிழக அரசு பஸ்கள் இயக்கப்பட்டன. நேற்று கம்பம் நகரில் இருந்து கம்பம் மெட்டு மார்க்கமாக செல்லும் கட்டப்பனை, நெடுங்கண்டம் ஆகிய ஊர்களுக்கு தமிழக அரசு பஸ்கள் இயக்கப்பட்டன. இதே போல் கேரள மாநிலம் வண்டிப் பெரியாறில் இருந்து கம்பம் நகருக்கு கேரள அரசு பேருந்து நேற்று காலை 11 மணிக்கு இயக்கப்பட்டது. 29 நாட்களுக்கு பிறகு பஸ்கள் இயக்கப்பட்டதால் கம்பம் புதிய பஸ் நிலையத்தில் மலையாளிகள் மகிழ்ச்சியடைந்தனர். இன்னும் ஓரிரு நாளில் சரக்கு போக்குவரத்தும் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் கம்பம் நகரில் படிப்படியாக இயல்பு வாழ்க்கை திரும்பி வருகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்