முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தேனியில் சாலை பாதுகாப்பு வார விழா வாகன விழிப்புணர்வு பேரணி

வியாழக்கிழமை, 5 ஜனவரி 2012      தமிழகம்
Image Unavailable

தேனி.ஜன.- 5 - தேனியில் கலெக்டர் டாக்டர் கே.எஸ்.பழனிசாமி தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு சாலை பாதுகாப்பு வார விழா வாகன விழிப்புணர்வு பேரணியை துவக்கி வைத்து பேசுகையில்,தேனி மாவட்டத்தில் ஜனவரி-2012 முதல் வாரத்தில் சாலை பாதுகாப்பு வார விழா அனுசரிக்கப்படுகிறது. அதனடிப்படையில் சாலை பாதுகாப்பு வாகன விழிப்புணர்வு பேரணி நடைபெறுகிறது.இம்மாதிரியான பேரணியில் போக்குவரத்து விதிகளை முறையாக கடைப்பிடித்து பொது மக்களுக்கு எவ்வித இடையுறுைமின்றி வாகன ஓட்டுனர்கள் உயிர்ப்பலியை தவித்து விபத்துக்களை தவிர்த்திட முன்வர வேண்டும். விபத்தை தவிர்த்து சாலை விபத்துக்களை குறைத்திட வேண்டும். வாகனம் ஓட்டும் போது ஓட்டுநர்கள் விருப்பு வெறுப்பிற்கு இடமளிக்காமல் முழு கவனமும் சாலையில் இருக்குமாறு பார்த்துக் கொள்ளவேண்டும். ஓட்டுநர்கள் அனுமதிக்கப்பட்ட அளவிற்கு அதிகமான வேகத்தில் வாகனத்தை இயக்கக் கூடாது.  போக்குவரத்து விதிகளை மதித்து கண்டிப்பாக விதிமுறைகளை கடைபிடிக்க வேண்டும். வாகனம் இயக்கும் போது செல்போனை உபயோகிக்க கூடாது. எதிரில் வாகனம் எதுவும் வரவில்லை என உறுதி செய்த பின்னரே, பிற வாகனத்தினை முந்த முயற்ச்சிக்க வேண்டும். களைப்பு, உறக்கம், சோர்வு ஏற்படும் நேரங்களில் வாகனத்தை இயக்கக் கூடாது. வாகனம் ஓட்டும் போது தண்ணீர் குடித்தல், தொலைக்காட்சி மற்றும் டேப்ரிக்கார்டு போன்றவற்றை தவிர்த்திட வேண்டும். மற்றும் வாகனம் ஓட்டும் போது அருகில் உள்ளவரிடம் பேசுவதை தவிர்த்திட வேண்டும். வாகனம் ஓட்டும் போது முன், பின் வரும் வாகனங்களை பார்த்து போக்குவரத்து விதிகளை கடைப்பிடித்து ஓட்டிச் செல்ல வேண்டும்.மேலும், வாகன ஓட்டுநர்களை நம்பி ஏரளாமான பொதுமக்கள் வாகனத்தில் பயணம்  செய்கின்றனர். அவர்களின் உயிர் பாதுகாப்பு அனைத்தும் ஓட்டுனர்களாகிய உங்களை நம்பித்தான் உள்ளது. வாகன ஓட்டுநர்களாகிய உங்களுக்கும் மனைவி, மக்கள் உங்களை நம்பி உள்ளனர். இதனை கட்டாயம் கருத்தில் கொண்டு வாகனம் ஓட்டிட வேண்டும். 2012-ஆம் ஆண்டு தேனி மாவட்டம் விபத்தில்லாத மாவட்டமாகவும், தமிழகத்திலேயே முன்னோடி மாவட்டமாகவும் திகழந்திட வாகன ஓட்டுனர்கள் ஒவ்வொருவரும் நல்; ஒத்துழைப்பு நல்கிட கேட்டுக்கொள்கிறேன். என தெரிவித்தார்.இப்பேரணியில், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை (திட்ட இயக்குநர்) தர்மசிவம், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் இராஜா, வட்டார போக்குவரத்து அலுவலர் செல்வக்குமார், தேனி நகர காவல்துறை துணைக் கண்காணிப்பாளர் புஷ்பா, மோட்டார் வாகன ஆய்வாளர்கள் ராஜ்குமார், வெங்கிடசாமி,  விஜயகுமார், உமாமகேஸ்வரி, தமிழ்நாடு அரசுப்போக்குவரத்து கழக கோட்ட மேலாளர் வெங்கடாச்சலம், கிளை மேலாளர் சுப்பிரமணியன், காவல்துறை போக்குவரத்து ஆய்வாளர் அய்யப்பசாமி, சார்பு ஆய்வாளர்  மணியன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
அதனை தொடர்ந்து போக்குவரத்துறை அரவிந்த் கண் மருத்துவமனை மற்றும் நலம் மருத்துவமனை இணைந்து தமிழ்நாடு அரசு போக்குவத்துக் கழக பணிமனையில் நடைபெற்ற வாகன ஓட்டுநர்களுக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் பொது மருத்துவ பரிசோதனை முகாமினை தேனி கலெக்டர் டாக்டர்.கே.எஸ். பழனிசாமி துவக்கி வைத்து பார்வையிட்டார்.
முகாமில் வாகன ஓட்டுநர், ஊழியர்கள் மொத்தம் 320 நபர்களுக்கு பரிசோதனை செய்யப்பட்டது. பரிசோதனையில்  மேல் சிகிச்சைக்காக சம்பந்தப்பட்ட மருத்துவமனைகளுக்கு பரிந்துரை செய்யப்பட்டது. இனிவருங்காலங்களில் மூன்று மாதத்திற்கு ஒரு முறை இது போன்ற தொடர் மருத்துவ பரிசோதனை முகாம்கள் நடத்தப்படும் என தெரிவித்தார்.
 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்