முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தமிழகத்தின் 9 நகரங்களில் திருப்பதி தேவஸ்தானம் சார்பில்கோயில்கள் கட்டமுடிவு

வியாழக்கிழமை, 5 ஜனவரி 2012      தமிழகம்
Image Unavailable

சென்னை, ஜன.- 5 - தமிழகத்தின் 9 நகரங்களில் கோயில்கள் கட்ட திருப்பதி தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது. திருமலை திருப்பதி தேவஸ்தானம் சார்பில், ஏற்கனவே வேலூர் உள்ளிட்ட இடங்களில் தேவஸ்தான கோயில்கள் கட்டப்பட்டுள்ளன. திருப்பதிக்கு சென்று வழிபட இயலாத பக்தர்கள், தேவஸ்தானம் சார்பிலான கோயில்களில் தங்களது நேர்த்திக் கடனை முடித்து வழிபாடு செய்கின்றனர். இந்நிலையில், திருப்பதி தேவஸ்தானம் சார்பில் தமிழகத்தின் முக்கிய நகரங்களில் கோயில்கள் கட்ட திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆந்திர மாநில இந்து அறநிலையத்துறை அமைச்சர் பொன்னாலா லக்ஷ்மையா, நேற்று முன்தினம் சென்னை வந்தார். தமிழக அறநிலையத்துறை அமைச்சர் ஆனந்தனை சந்தித்து பேசிய அவர், தமிழக கோயில்களில் நடத்தப்படும் திருப்பணிகள், பராமரிப்பு பணிகள், திருக்குளங்கள் சீரமைப்பு, இதர பராமரிப்பு பணிகள், ஏழைகளுக்கான திருமண திட்டங்கள், கோயில்களில் நடத்தப்படும் திருமண திட்டங்கள், அன்னதான திட்டம், கோயில் யானைகளுக்கான புத்துணர்வு முகாம்கள், திருவிழாக்கள் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து, கேட்டறிந்தார். திருப்பதி தேவஸ்தானம் சார்பில் தமிழகத்தின் முக்கிய நகரங்களில் கோயில் கட்டும் திட்டம் உள்ளதாகவும் ஆந்திர அமைச்சர் பொன்னாலா தெரிவித்துள்ளார். தமிழகத்தில் 9 இடங்களில் கோயில்கள் கட்டப்படுகிறது. சென்னையில் 100 ஏக்கர் பரப்பளவில் கோயில் அமைகிறது. அதேபோல, கிழக்கு கடற்கரை சாலையிலும் கோயில் கட்ட திட்டமிடப்பட்டுள்ளதாக இந்து அறநிலையத்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.    

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago