முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

2-ம் கட்ட போலியோ தடுப்பு முகாம் 8-ம் தேதி நடக்கிறது

வியாழக்கிழமை, 5 ஜனவரி 2012      அரசியல்
Image Unavailable

 

சென்னை, ஜன.6 - வெளிமாநிலங்களிருந்து தமிழகம் வந்தோர் குழந்தைகளுக்கு போலியோ நோய் தடுப்பு சொட்டு மருந்து முகாம் வரும் 8-ம் தேதி ஞாயிறு அன்று நடக்கவுள்ளது.இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- தமிழகத்தில் ஒவ்வொரு ஆண்டும் பல்ஸ் போலியோ முகாம் வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டதால் போலியோ நோய் இல்லாத நிலை உருவாகி உள்ளது.  இருந்த போதிலும், வெளி மாநிலங்களிலிருந்து தமிழ்நாட்டிற்கு வேலை தேடி வருவோர் குழந்தைகள் மூலம் போலியோ வைரஸ் நோய் பரவும் அபாயம் உள்ளது.  இவ்வாறு அடிக்கடி இடம் பெயர்ந்து வாழ்வோரின் குழந்தைகளுக்கு சரியான தவணைகளில் தடுப்பு மருந்து கிடைப்பதில்லை.    சென்ற மாதம் 11​12​2011 அன்று இடம் பெயர்ந்து வாழ்வோரின் குழந்தைகளுக்கு போலியோ நோய்க்கு எதிரான தடுப்பு சக்தியை உருவாக்குவதற்காக சிறப்பு போலியோ சொட்டு மருந்து முகாம் நடத்தப்பட்டது.  இந்த போலியோ சிறப்பு முகாமில் அரசுத்துறையை சார்ந்தவர்கள் மட்டுமில்லாமல் தன்னார்வ தொண்டு நிறுவனம் மற்றும் ரோட்டரி இன்டர்நேஷனலை சார்ந்தவர்களும் சேர்ந்து பணியாற்றினார்கள்.  இந்த முகாம் வாயிலாக 31,000 குழந்தைகள் பயன் அடைந்தனர்.

8​1​2012 அன்று இடம் பெயர்ந்து வாழ்வோரின் குழந்தைகளுக்காக 2ஆம் தவணை போலியோ சொட்டு மருந்து அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.    ஒவ்வொரு மாவட்டங்களிலும் இடம் பெயர்ந்து வாழ்வோரின் குழந்தைகளுக்கான பட்டியலில் புதிதாக வந்தவர்களும் சேர்க்கப்பட்டு தயாரிக்கப்பட்டுள்ளது.  8​1​2012 (ஞாயிறு) அன்று நடைபெறும் முகாம் வாயிலாக ஏறக்குறைய 32,000 இடம் பெயர்ந்து வாழ்வோரின் குழந்தைகள் பயனடைவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.    

இவ்வாறு தமிழக அரசு செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்