முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஒரே நேரத்தில் தேர்வு: உயர்கல்வித்துறை அமைச்சர் அறிவுறுத்தல்

வியாழக்கிழமை, 5 ஜனவரி 2012      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, ஜன.6 - அனைத்து பல்கலைக்கழங்களிலும் ஒரே நேரத்தில் தேர்வு நடத்தி, முடிவுகள் வெளியிட உயர்கல்வித்துறை அமைச்சர் பி.பழனியப்பன் அறிவுறுத்தியுள்ளார். சென்னை தலைமைச் செயலகத்தில் உயர்கல்வித் துறையின் நடவடிக்கை குறித்த ஆய்வுக் கூட்டம் உயர்கல்வித்துறை அமைச்சர் பி.பழனியப்பன் தலைமையில் நடைபெற்றது.  இக்கூட்டத்தில் 2011 ​2012ம் ஆண்டுக்கான மானியக் கோரிக்கையின் போது அறிவித்த புதிய திட்ட,ஙகள் குறித்து ஆய்வு மேற்கொண்டு அனைத்து திட்டங்களும் உடனடியாக முடிக்க வேண்டி அனைத்து துறை தலைவர்கள் மற்றும் அனைத்து பல்கலைக் கழக பதிவாளர்களும் கேட்டுக் கொள்ளப்பட்டார்கள்.

மேலும் உயர்கல்வித்துறை அமைச்சர் குறிப்பிடுகையில் மாணவர்கள் உயர்கல்வி பெறும் வகையில் அனைத்து பல்கலைக்கழகங்களும் ஒரே நேரத்தில் தேர்வு நடத்தியும் ஒரே நேரத்தில் தேர்வு முடிவுகள் வெளியிடுவதற்கும் நடவடிக்கை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டது.  மேலும் அனைத்து கல்லூரிகளுக்கும் நிரந்தர கட்டிட வசதி செய்து நடவடிக்கை மேற்கொள்ளவும், இந்த ஆண்டு புதிதாக துவக்கப்பட்ட 11 பல்கலைக்கழக உறுப்பு கல்லூரிகளுக்கு நிரந்தர கட்டிடம் கட்டும் வகையில் அந்தந்த மாவட்ட ஆட்சியரை அணுகி நிலம் கையகப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டது.

தேனி மாவட்டம் போடி நாயக்கனூரில் இந்த ஆண்டு துவக்கப்படவுள்ள புதிய அரசு பொறியியல் கல்லூரி துவக்குவதற்கான ஆயத்த பணிகளை மேற்கொள்ள தொழில்நுட்ப கல்வி ஆணையரைக் கேட்டுக் கொள்ளப்பட்டது.

இக்கூட்டத்தில் உயர்கல்வித்துறை முதன்மைச் செயலாளர், தமிழ்நாடு அறிவியல் நகரம் முதன்மைச் செயலாளர், தொழில் நுட்ப கல்வி ஆணையர், உயர்கல்வித்துறை இணைச் செயலாளர் மற்றும் அனைத்து பல்கலைக்கழக பதிவாளர்களும் கலந்து கொண்டார்கள்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்