முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ரேஷன் பொருட்கள் பெறுவதில் சிரமமா? போனில் புகார் தரலாம்

வியாழக்கிழமை, 5 ஜனவரி 2012      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, ஜன.6 - குடும்ப அட்டைகளை புதுப்பிக்கும் பணியிலோ, ரேஷன் பொருட்களை வாங்கும் போதோ பொதுமக்களுக்கு சிரமம் ஏற்பட்டால். போனில் புகார் தரலாம் என உணவுப் பொருட்கள் வழங்கல் துறை அறிவித்துள்ளது. இது குறித்து தமிழ்நாடு உணவு பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை ஆணையர் பஷீர் அகமது வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:-

தற்பொழுது புழக்கத்திலுள்ள குடும்ப அட்டைகளின் காலத்தை (1.2.2012) முதல் 31.12.2012 வரை) மேலும் ஒரு ஆண்டிற்கு நீட்டித்து அரசு உத்தரவிட்டதின்படி 1.1.2012 முதல் குடும்ப அட்டைகள் புதுப்பிக்கும் பணி சென்னை உட்பட அனைத்து மாவட்டங்களிலும் நடைபெற்று வருகின்றது. புதுப்பிக்கும் பணிக்கான செயல்திட்டம் மற்றும் களப்பணியாளர்கள் இப்பணியை செயல்படுத்தும் விதம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

குடும்பத் தலைவர்கள், உறுப்பினர்கள் தாங்களே முன் வந்து வாய்மொழியாக தேவையான விவரங்களை தெரிவித்து குடும்ப அட்டைகளை புதுப்பித்துக் கொள்வதுடன், தங்களுக்குத் தேவையான அத்தியாவசியப் பொருள்களையும் வாங்கிச் செல்கின்றனர். 5.1.2012 வரை 6.5 லட்சம் குடும்ப அட்டைதாரர்கள் தங்கள் குடும்ப அட்டைகளை புதுப்பித்துள்ளனர்.

28.2.2012 முடிய வரிசைக் கிரம பட்டயலின் படி உரிய நாட்களில் புதுப்பித்துக் கொள்ள கால அவகாசம் உள்ளது. இந்த குடும்ப அட்டைகள் புதுப்பிக்கும் பணியிலோ அல்லது அத்தியாவசிய உணவு பொருள்கள் பெறுவதிலோ ஏதேனும் சிரமங்கள் இருப்பின், குடும்ப அட்டைதாரர்கள் கீழ்க்கண்ட 1. 7299998002, 2. 8680018002, 3. 7200018001 என்ற தொலை பேசி எண்ணில் தொடர்பு கொண்டு விரங்கள் தெரிவிக்கவும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

இவ்வாறு அந்த செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்