முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தமிழக சட்டசபைக் கூட்டம் 30-ம் தேதி தொடங்குகிறது

வியாழக்கிழமை, 5 ஜனவரி 2012      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, ஜன.6 - தமிழக சட்டசபைக் கூட்டம் வருகிற 18ம் தேதிக்குப் பதில் 30ம் தேதி தொடங்கும் என்று சட்டசபை செயலகம் அறிவித்துள்ளது.இது குறித்து சட்டப்பேரவை செயலாளர் ஏ.எம்.பி.ஜமாலுதீன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது : இந்த ஆண்டுக்கான முதல் சட்டசபைக் கூட்டத் தொடர் வருகிற 18ம்தேதி தொடங்கும், அன்று ஆளுநர் கே.ரோசய்யா உரை நிகழ்த்துவார் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

தற்போது இதில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. 18ம் தேதிக்குப் பதில் 30ம் தேதி சட்டசபை கூட்டம் தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அன்றைய தினம் சட்டசபையில் ஆளுநர் கே.ரோசய்யா தொடக்க உரை நிகழ்த்துவார்.இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. 30ம்தேதி அவைக்கூடியதும் ஆளுநர் ரோசய்யா உரை நிகழ்த்துவார்,

இந்த ஆண்டுக்கான முதல் கூட்டம் இது என்பதோடு, ஆளுநர் கே. ரோசய்யா ஆளுநர் பதவியில் அமர்ந்த பின்னர் நடைபெறும் முதல் கூட்டமும் இதுதான் என்பது குறிப்பிடத்தக்கது.தொடர்ந்து முன்னாள் உறுப்பினர்கள் மறைவுக்கு இரங்கல் தெரிவித்தபின் அவை ஒத்திவைக்கப்படும். பின்னர் சட்டப்பேரவை அலுவல் ஆய்வுக்குழு கூடி,சட்டப்பேரவை எத்தனை நாள் நடக்கவேண்டும் என்று முடிவு செய்யும்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்