முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கட்சியிலிருந்து வெங்கடாஜலம் - கே.சி.செல்வராஜ் நீக்கம்

வெள்ளிக்கிழமை, 6 ஜனவரி 2012      அரசியல்
Image Unavailable

 

சன்னை, ஜன.6 -  கட்சி விரோத நடவடிக்கையில் ஈடுபட்டதாக சேலம் மாநகர் மாவட்ட முன்னாள் செயலாளர் வெங்கடாஜலம், சேலம் மேற்கு சட்டமன்ற தொகுதிச் செயலாளர் கே.சி.செல்வராஜ் ஆகியோரை கட்சியிலிருந்து நீக்கி உள்ளதாக அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், தமிழக முதல்வருமான ஜெயலலிதா அறிவித்துள்ளார். இது குறித்து ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:-

கழகத்தின் கொள்கை குறிக்கோள்களுக்கும், கோட்பாடுகளுக்கும் முரணான வகையில் செயல்பட்டதாலும், கழகத்தின் கண்ணியத்திற்கு மாசு ஏற்படும் வகையில் நடந்து கொண்டதாலும் கழகக் கட்டுப்பாட்டை மீறி கழகத்திற்கு களங்கமும் அவப்பெயரும் உண்டாகும் விதத்தில் செயல்பட்ட காரணத்தினாலும், சேலம் மாநகர் மாவட்டத்தைச் சேர்ந்த மாவட்ட முன்னாள் செயலாளர் வெங்கடாஜலம், சேலம் மேற்கு சட்டமன்றத் தொகுதிச்செயலாளர் கே.சி.செல்வராஜ் ஆகியோர் இன்று (நேற்று ஜன.5) முதல் கழகத்தின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உட்பட அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் நீக்கி வைக்கப்படுகிறார்கள்.

கழக உடன்பிறப்புகள் யாரும் இவர்களுடன் எவ்விதத் தொடர்பும் வைத்துக் கொள்ளக்கூடாது எனக் கோட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு ஜெயலலிதா அந்த அறிவிப்பில் கூறியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்