முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மதுரையில் 21 லட்சத்து 90 ஆயிரத்து 416 வாக்காளர்கள்

வெள்ளிக்கிழமை, 6 ஜனவரி 2012      அரசியல்
Image Unavailable

 

மதுரை,ஜன.6 - மதுரை மாவட்டத்தில் 21 லட்சத்து 90 ஆயிரத்து 416 வாக்காளர்கள் உள்ளதாக வரைவு வாக்காளர் பட்டியலை வெளியிட்டு கலெக்டர் சகாயம் தெரிவித்தார்.   இந்திய தேர்தல் ஆணையத்தின் அட்டவணைப்படி வரைவு வாக்காளர் பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது. 24.10.2011 முதல் 11.11.11 வரை வாக்காளர் பெயர் சேர்க்கவும், திருத்தம் செய்திடவும், நீக்கம் செய்திடவும் போன்ற இனங்களுக்கு படிவங்கள் பெறப்பட்டு உரிய அலுவலர்களை கொண்டு விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டது. மதுரை மாவட்டத்தில் உள்ள 10 சட்டமன்ற தொகுதிகளுக்கான வரைவு வாக்காளர் பட்டியலை கலெக்டர் சகாயம் நேற்று வெளியிட்டார். அதன் படி 10 லட்சத்து 94 ஆயிரத்து 567 ஆண் வாக்காளர்களும், 10 லட்சத்து 95 ஆயிரத்து 839 பெண் வாக்காளர்களும், இதர வாக்காளர்களும் (திருநங்கையர்) 10 பேரும் மொத்தம் 21 லட்சத்து 90 ஆயிரத்து 416 பேர் இடம் பெற்றுள்ளனர். சட்டமன்ற தொகுதி வாரியாக வாக்காளர்கள் விவரம் வருமாறு,

 மேலூர்

ஆண்கள்- 1,04573

பெண்கள்-1,05384

மொத்தம் -2,09957

மதுரை கிழக்கு

ஆண்கள் -1,25492

பெண்கள் -1,25887

மொத்தம் -2,51381

சோழவந்தான் 

ஆண்கள் -9,3626

பெண்கள் -9,3800

மொத்தம் -1,87446

மதுரை வடக்கு

ஆண்கள் -1,04307

பெண்கள் -105728

மொத்தம் -2,10036

மதுரை தெற்கு

ஆண்கள் -9,5818

பெண்கள் -9,5604

மொத்தம் -1,91422

மதுரை மத்தி

ஆண்கள் -102523

பெண்கள் -1103534

மொத்தம் -206057

மதுரை மேற்கு

ஆண்கள் -117829

பெண்கள் -115757

மொத்தம் -233586

திருப்பரங்குன்றம்

ஆண்கள் -116247

பெண்கள்-114887

மொத்தம் -233586திருமங்கலம்

ஆண்கள் -115188

பெண்கள் -118280

மொத்தம் -233468

உசிலம்பட்டி

ஆண்கள் - 118944

பெண்கள் -116978

மொத்தம் 2,35926

 இது குறித்து கலெக்டர் சகாயம் மேலும் கூறும் போது, தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டுதலின்படி 18 வயது முதல் 19 வயது வரை உள்ள விடுப்பட்டு போன வாக்காளர்களின் பெயர் சேர்த்திட 5.1.12 முதல் 15 1.12வரைவு சிறப்பு முகாம் நடைபெற உள்ளது. தகுதியுடைவர்கள் உரிய படிவத்தை நிரப்பி கொடுத்து வாக்காளர்களாக பதிவு செய்து கொள்ள கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்