முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அ.தி.மு.க. கூட்டணிக்கு கொங்கு தமிழர் பேரவை ஆதரவு

செவ்வாய்க்கிழமை, 15 மார்ச் 2011      அரசியல்
Image Unavailable

 

சென்னை, மார்ச். 15 - அ.தி.மு.க. கூட்டணிக்கு கொங்கு தமிழர் பேரவை ஆதரவு அளித்துள்ளது. இதுகுறித்து மாநில தலைவர் தீரன்சாமி நிருபர்களிடம் கூறியதாவது:- எங்கள் கட்சியின் துவக்க விழா நடைபெற்றது. கோவை செழியனின் 11-ம் ஆண்டு நினைவு தினம் அனுஷ்டிக்கப்பட்டது. வருகிற பொதுத் தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணிக்கு ஆதரவு தர முடிவு செய்துள்ளோம். காங்கேயம் மண்ணில் பிறந்து வெள்ளையர்களுக்கு எதிராக வீர முழக்கம் இட்ட இந்திய விடுதலைப்புலி மாவீரன் தீரன் சின்னமலையின் ஆசி பெற்ற கொங்கு தமிழகத்தின் போராளி கோவை செழியனாரின் 11 ஆம் நினைவு மற்றும் எமது மாநில கொங்கு தமிழவ் பேரவையின் 10 ஆம் ஆண்டு துவக்க தினம் மார்ச் 14-ல் கொங்கு தமிழர் கட்சி துவக்கப்பட்டு கொடி மற்றும் கொள்கைகள் வெளியீட்டு கூட்டம் நடைபெற்றது. 

கூட்டத்துக்கு பேரவையின் நிறுவனர் மற்றும் மாநில அமைப்பாளர் டி.கே.தீரன்சாமி தலைமை தாங்கினார். பொதுச் செயலாளர் சேலம் ஆர்.ராஜேந்திரன், பொருளாளர் எஸ்.கே.நந்தகுமார், செயற்குழு உறுப்பினர் கே.ஜெகதீஸ்வரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கவுரவ ஆலோசகர்  அரங்கதுரைராஜ் தேர்வேந்தன் கட்சியின் கொடியை வெளியிட்டார். முன்னதாக கோவை செழியனாரின் உருவப்படத்திற்கு வீரவணக்கம் செலுத்தப்பட்டது. ஜப்பானில் சுனாமியால்  உயிரிழந்தவர்களுக்கு மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது. 

இந்நிகழ்ச்சியில் மாவட்ட அமைப்பாளர்கள் சென்னை எஸ்.முரளி, வேலூர் ஆர்.ரத்தினசாமி, திருவண்ணாமலை ம.சத்தியமூர்த்தி, கிருஷ்ணகிரி செ.நல்லமுத்து, தர்மபுரி குழ.செல்லப்பன், சேலம் மாநகரம் பெ.பிங்கிள், புறநகர் ஏ.சிபெருமாள், நாமக்கல் பொன்.சுப்பிரமணி, ஈரோடு பி.வேலுக்கவுண்டர், திருப்பூர் கே.சி.திருநாவுக்கரசு, கோவை அ.பாலசுப்பிரமணி, நீலகிரி வி.பி.ராதா, திண்டுக்கல் இரா.ராஜாமணி, கரூர் சி.திருமூர்த்தி மற்றும்பேரவையின் நிர்வாகிகள், ச எயற்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். 

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-

பேரவையின் மாநில அமைப்பாளர் டி.கே.தீரன்சாமி கட்சியின் மாநில தலைவராகவும், பேரவையின் பொதுச் செயலாளர் சேலம் ஆர்.ராஜேந்திரன் கட்சியின் மாநில பொதுச் செயலாளராகவும் நியமிப்பது, மேலும் பேரவையில் அனைத்து நிலைகளிலும் செயல்படும் பொறுப்பாளர்கள் கட்சியிலும் அதே பொறுப்பில் தொடர்வார்கள். 

ஈழத் தமிழர்களின் துயர் துடைக்க இலங்கையில் தனி ஈழம் ஒன்று அமைக்க நமது மைய, மாநில அரசுகள் ஆவன செய்ய வேண்டும். மைய- மாநில  அரசுகள் சாதி ரீதியான மக்கள் தொகை கணக்கு எடுப்பு நடத்தப்பட வேண்டும். அனைத்து அரசியல் கட்சிகளில் மாநில, மாவட்ட, ஒன்றிய நிர்வாகிகள் மற்றும் அனைத்து தேர்தல்களின் போது வேட்பாளர்கள் நிலையில் எமது சமுதாயத்துக்கு உரிய பிரதிநிதித்துவம் அளிக்கப்பட வேண்டும். மைய, மாநில அரசுகளின் அமைச்சர்கள், உயர் அதிகாரிகள், நீதிபதிகள், வாரியம் மற்றும்  தேர்வாணைய குழுக்களின் தலைவர், உறுப்பினர்கள் போன்ற அனைத்திலும்  எமது சமூகத்துக்கு உரிய அங்கீகாரம் அளிக்கப்பட வேண்டும். எமது கொங்கு கவுண்டர், வேளாளர் சமுதாயத்தை மிகவும் பிறப்படுத்தப்பட்டடோர் பட்டியலில் சேர்க்கப்பட வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!