முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தமிழகம் முழுவதும் தாட்கோ சார்பில் புதிய தொழில் பயிற்சி :அரசு அறிவிப்பு

ஞாயிற்றுக்கிழமை, 8 ஜனவரி 2012      தமிழகம்
Image Unavailable

 

சென்னை,ஜன.- 8 - தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் தமிழ் நாடு ஆதி திராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) சார்பில் புதிய தொழில் முனைவோருக்கான இலவசப் பயிற்சி நடக்க உள்ளது. இது குறித்து தாட்கோவின் வேளாண்மை இயக்குனர் விடுத்துள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது : தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) மற்றும் தொழில் முனைவோருக்கான நீங்களும் தொழில் முனைவோராகலாம் என்ற தலைப்பில் இலவச பயிற்சி அனைத்து மாவட்டங்களிலும் நடத்தப்பட உள்ளது. ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இனத்தைச் சேர்ந்த 18 முதல் 35 வயதுக்குட்பட்டவர்கள் இந்த இலவச பயிற்சியில் கலந்து கொள்ளலாம். இவர்களுக்கான கல்வித்தகுதி பட்டப் படிப்பு அல்லது பட்டயப் படிப்பு ஆகும். தொழில் முனைவோராக ஆர்வமுள்ள, தகுதி வாய்ந்த இளைஞர்கள் தங்கள் பெயர், விலாசம், கைபேசி, மின் அஞ்சல், கல்வித் தகுதி, சாதி சான்றிதழ், மற்றும் இரு பாஸ்போர்ட் அளவு புகைப்படத்துடன் அந்தந்த மாவட்டத்திலுள்ள, மாவட்ட மேலாளர், தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) என விண்ணப்பிக்க கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

விண்ணப்பிக்க கடைசி நாள் ஜனவரி 18 ம் தேதி ஆகும்.

இந்த அரிய சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொள்ள ஆர்வமுள்ள ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இனத்தைச் சேர்ந்த இளைஞர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு அந்த செய்தி குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.  

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!