முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

முல்லைப்பெரியாறு அணையை கட்டிய பென்னி குவிக்குக்கு மணிமண்டபம்- ஜெயலலிதா

திங்கட்கிழமை, 9 ஜனவரி 2012      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, ஜன.- 9 - முல்லைப்பெரியாறு அணையை கட்டிய ஆங்கிலேய பொறியாளர் பென்னி குவிக்குக்கு, லோயர் கேம்பில் உள்ள மின்சார வாரிய வளாகத்தில் 2,500 சதுர அடி பரப்பளவில், ரூ.1 கோடி செலவில், அவரது திருவுருவச்சிலையுடன் கூடிய மணிமண்டபம் கட்டப்படும் என தமிழக முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழ்நாட்டு  மக்களின் உணவுத் தேவைகளை nullர்த்தி செய்வதில்  தென் தமிழக மாவட்டங்களான தேனி, மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம், திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களும் முக்கிய பங்கு வகிக்கின்றன. மேற்கு தொடர்ச்சி மலையில் பெய்யும் மழைnullநீர், முல்லை ஆறு மற்றும் பெரியாறு என்ற ஆறுகளாக கேரள மாநிலத்தில் ஓடி வீணாக கடலில் கலப்பதை தவிர்க்க உருவாக்கப்பட்ட முல்லைப் பெரியாறு அணை மூலம் இந்த மாவட்டங்களுக்கு பாசனத்திற்கு தேவையான தண்ணீர் கிடைக்கப் பெறுகிறது. மேலும், இம்மாவட்டங்களின் குடிநீnullர் தேவையும் இந்த அணை மூலம் பெருமளவு நிறைவு செய்யப்படுகிறது. இந்த முல்லைப் பெரியாறு அணையை உருவாக்கியவர் கர்னல் பென்னிகுவிக் என்ற ஆங்கிலேய பொறியாளர் ஆவார்.  இவர் ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் ராணுவ பொறியாளராக இந்தியாவிற்கு வந்தவர். நம் நாட்டை ஆங்கிலேயர் ஆண்ட காலத்தில், பெரியாறு அணை கட்டப்படுவதற்கு முன், சென்னை மாகாணத்தில், வைகை வடிநிலப்பரப்பில் பல  முறை மழை பொய்த்து மிகுந்த உணவு பஞ்சம் ஏற்பட்டது.  இதனால் பல்லாயிரக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டனர்.  இதனை கண்ட பென்னிகுவிக் மிகவும் வருத்தம் அடைந்தார். இதன்  தொடர்ச்சியாக, கர்னல் பென்னிகுவிக் மேற்கு தொடர்ச்சி மலையில் பெய்யும் மழைநீnullர் பெரியாறு என்ற ஆறாக மேற்குப் புறமாக  ஓடி அரபிக் கடலில்  வீணாகச் சென்று கலப்பதைப் பார்த்து இதனை கிழக்குப் புறமாக திருப்பி விடுவதன் மூலம்  வைகை நதி நீnullரை மட்டுமே நம்பியுள்ள  பல லட்சம் ஏக்கர் வறண்ட நிலங்கள்  விளை நிலங்களாக மாறும் எனக் கருதி, பெரியாற்றின்  குறுக்கே அணை ஒன்றினை கட்ட திட்டமிட்டார். இதன் அடிப்படையில் பெரியாறு தேக்கடி நீnullர்தேக்கம் உருவாக்கப்பட்டு, அவை கிழக்கு முகமாக  திருப்பி விடப்பட்டு, அங்கிருந்து ஒரு குகைப் பாதை வழியாக வைகை ஆற்றிற்குத் திருப்பி விடப்படுகிறது. இதற்காக திட்டம் ஒன்றினை தயாரித்து ஆங்கில அரசின் பார்வைக்கு அனுப்பி அனுமதியும் பெற்றார்.  அப்போதைய சென்னை மாகாண அரசின் கவர்னர் லார்டு கன்னிமாரா முன்னிலையில் அணை கட்டுவதற்கான பணிகள் தொடங்கப்பட்டன.

ஆங்கிலேயப் பொறியாளர் கர்னல் பென்னிகுவிக் தலைமையில் பிரிட்டிஷ் பொறியாளர்கள் இந்த அணை கட்டுமானப் பணியினை மேற்கொண்டனர். காடு, விஷப்nullச்சிகள், காட்டு யானைகள், வன விலங்குகள், கடும் மழை, திடீரென உருவாகும் காட்டாற்று வெள்ளம் போன்றவைகளையும் பொருட்படுத்தாமல், மூன்று ஆண்டுகளில் அணை பாதி கட்டப்பட்டுக் கொண்டிருந்த நிலையில் தொடர்ந்து பெய்த மழையினால் உருவான வெள்ளத்தினால், கட்டுமானப் பணிகளுக்கு பாதிப்பு ஏற்பட்டது.  இதனையடுத்து,  இந்தத் திட்டத்தினை தொடர்வதற்கு ஆங்கிலேய அரசின் நிதி ஒதுக்கீடு குறிப்பிட்ட காலக்கட்டங்களில் கிடைக்காததால் பென்னிகுவிக் இங்கிலாந்து சென்று தனது குடும்ப சொத்துக்களை விற்று, அதன் மூலம் கிடைத்த பணத்தை கொண்டு வந்து, முல்லைப் பெரியாறு அணையை  1895 ஆம் ஆண்டில் கட்டி முடித்தார். இந்த அணை அக்டோபர் 1895ஆம் ஆண்டு அப்போதைய சென்னை மாகாண கவர்னர் லார்டு வென்லாக்கால் திறந்து  வைக்கப்பட்டது.   இதனால்  தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களில் உள்ள 2.23 லட்சம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதியினை பெற்று வருகின்றன.     அந்தக் காலத்திலேயே பென்னிகுவிக் இந்த அணையை சுண்ணாம்பு சுர்க்கி கலவையால் கருங்கல்லினால் புவிஈர்ப்பு விசை அடிப்படையில் கட்டினார்.   புவிஈர்ப்பு விசை அடிப்படையில் கட்டப்பட்ட  அணைகள் நில அதிர்வுகளினால் ஏற்படும் விசை போன்றவற்றை தனது பளுவினால் தாங்கிக் கொள்வதால் இந்த அணை இன்றும் உறுதியுடன் இருக்கின்றது.

இந்த அணையை கட்டியதன் மூலம், இருந்தாலும் மறைந்தாலும் பேர் சொல்ல வேண்டும், இவர் போல யாரென்று ஊர் சொல்ல வேண்டும், என்ற புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆரின் பாடலுக்கு இலக்கணமாக, நூற்றாண்டு கடந்தும் இன்றும் தமிழக மக்களின் நினைவில் பென்னிகுவிக் நிற்கின்றார். இந்த அணை  இன்றளவும்  நன்முறையில் இயங்கி வருவதாலும், மேலும் பல  நூறு ஆண்டுகள் நிலைத்து நிற்கும் என்பதாலும், இந்த அணையை உருவாக்கிய பென்னிகுவிக் அவர்களுக்கு நமது நன்றியினை காட்டும் வகையில், அன்னாருக்கு ஓரு நினைவு மணிமண்டபம் நிறுவ வேண்டும் என தேனி உள்ளிட்ட தென் மாவட்ட  மக்கள் கோரியுள்ளனர். தென் தமிழகத்தின் வளத்திற்காக முல்லைப் பெரியாறு அணையை  பல்வேறு  இடர்பாடுகளுக்கிடையே உரிய காலத்தில் முடிப்பதற்காக தனது சொந்த நிதியினையும் செலவு செய்த பென்னிகுவிக்கின் நினைவை நன்றியுடன் போற்றும் வகையில் அன்னாருக்கு லோயர் கேம்ப்பில் உள்ள தமிழ்நாடு மின்சார வாரிய வளாகப் பகுதியில் சுமார் 2,500 சதுர அடி பரப்பில், ஒரு கோடி ரூபாய் செலவில், அவரது திருஉருவ சிலையுடன் கூடிய ஒரு மணிமண்டபம் அமைக்கப்படும் என்பதை பெருமகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த மணிமண்டபம் கட்டி முடிக்கப்பட்டபின், அதன் திறப்பு விழாவிற்கு பென்னிகுவிக்கின் பேரன் அழைக்கப்படுவார். முல்லைப் பெரியாறு அணை மூலம் தென் தமிழகத்தின் வளத்திற்கு வித்திட்ட பெருமகனின் சேவையை நன்றியுடன் நினைவுகூரும் வகையில் இந்த மணிமண்டபம் அமையும். 

இவ்வாறு அந்த அறிக்கையில் முதல்வர் ஜெயலலிதா கூறியுள்ளார்.

 

   

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago