முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

புயல் நிவாரணத்துக்கு ரூ. 5,000 கோடி: தமிழகம் கோரிக்கை

திங்கட்கிழமை, 9 ஜனவரி 2012      தமிழகம்
Image Unavailable

சென்னை, ஜன. - 9 - தானே புயலால் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை சீர் செய்யவும், மீட்பு மற்றும் நிவாரண பணிகளை மேற்கொள்ளவும் ரூ. 5 ஆயிரம் கோடிக்கு மேல் தேவை என மத்திய குழுவிடம் தமிழகம் கோரிக்கை விடுத்துள்ளது.  மத்திய உள்துறை இணையமைச்சர் லோகேஷ் தலைமையிலான குழு தமிழகம் வந்து புயல் பாதிப்புகளை ஆராய்ந்து மத்திய அரசுக்கு அறிக்கை அளிக்கவுள்ளது. சென்னையில் மாநில தலைமை செயலாளர் தேவேந்திரநாத் சாரங்கி தலைமையில் இது தொடர்பான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. அரசின் பல்துறை செயலாளர்கள் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்ட இந்த கூட்டத்தில் புயலால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்து மத்திய குழுவினரிடம் விளக்கமளிக்கப்பட்டது. புயலால் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை சீர் செய்யவும், மேலும் எதிர்காலத்தில் பாதிப்பு ஏற்படாமல் தடுக்கும் விதமாக நிரந்தர நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் மத்திய குழுவிடம் தமிழக அரசு கோரிக்கை வைத்துள்ளது. மத்திய குழுவினர் அளிக்கும் அறிக்கையை மத்திய உள்துறை அமைச்சர் சிதம்பரம் உள்ளிட்டோர் கொண்ட குழு மத்திய அரசுக்கு பரிந்துரை செய்யும். அதனடிப்படையில் தமிழகத்துக்கு மத்திய அரசு நிதி உதவி செய்யும் என மத்திய அரசு துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!