முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திருப்பதி கோவிலில் நடிகை மீனா குழந்தையுடன் தரிசனம்

திங்கட்கிழமை, 9 ஜனவரி 2012      சினிமா
Image Unavailable

நகரி,ஜன.- 9 - திருப்பதி கோவிலில் நடிகை மீனா குழந்தையுடன் தரிசனம் செய்தார். முன்வாசல் வழியாக செல்ல பாதுகாவலர்கள் அனுமதி மறுத்துவிட்டனர். திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வழிபட நடிகை மீனா குழந்தையுடன் வந்து இருந்தார். முன்வாசல் வழியாக சென்று தரிசனத்துக்கு காத்துஇருந்தார். அவருக்கு முன்னால் நடிகர் நாகர்ஜூனா, மனைவி அமலா, மகன் அகிலுடன் வந்து இருந்தார். நாகர்ஜூனா தரிசனத்துக்கு உள்ளே அனுமதிக்கப்பட்டார். அப்போது மத்தியஅமைச்சர் பிரணாப்முகர்ஜி,  முதல்வர் கிரண்குமார்ரெட்டி கோவிலுக்கு வந்தனர். இதனால் மீனா தடுத்து நிறுத்தப்பட்டார். பிரணாப்முகர்ஜி சென்ற பிறகே அவர் உள்ளே செல்ல அனுமதிக்கப்பட்டார். பின்னர் தரிசனம் முடிந்து வெளியே வந்த அவரை முன்வாசல் வழியாக செல்ல பாதுகாவலர் அனுமதிக்கவில்லை. அவர்களிடம் மீனா நான் குழந்தையுடன் வந்துள்ளேன். ராம் பகீஷா தங்கும் விடுதி முன் எனது கார் நிற்கிறது.  எனவே இந்த வழியாக செல்ல அனுமதியுங்கள் என்று கெஞ்சினார்.  ஆனால் மத்தியமந்திரி பாதுகாப்பு கருதி முன்வாசல் வழியாக செல்ல பாதுகாவலர் மறுத்துவிட்டனர். நீண்ட நேரம் வாதாடியும் பலன் கிடைக்கவில்லை. இறுதியில் பின்புறம் லட்டு கவுண்டர் வழியாக வெளியே வந்த நடிகை மீனா 1கிலோ மீட்டர் தூரம் நடந்து தனது விடுதியை அடைந்தார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!