முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆப்கனில் இருந்து அமெரிக்க படைகள் வெளியேற குடியரசுக்கட்சி கோரிக்கை

திங்கட்கிழமை, 9 ஜனவரி 2012      உலகம்
Image Unavailable

வாஷிங்டன், ஜன.- 9 - ஈராக்கில் இருந்து அமெரிக்க படைகள் முழுவதுமாக வாபஸ் பெறப்பட்டதைப் போல ஆப்கானிஸ்தானில் இருந்தும் அமெரிக்க படைகளை முழுமையாக வாபஸ் பெற வேண்டும் என்று குடியரசு கட்சி கோரிக்கை விடுத்துள்ளது. மசாசூசெட்ஸ் மாகாண முன்னாள் கவர்னர் மிட் ரோமி வாஷிங்டனில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறுகையில், ஆப்கானிஸ்தானில் உள்ள அமெரிக்க படைகள் எவ்வளவு சீக்கிரமாக வெளியேற வேண்டுமோ, அவ்வளவு சீக்கிரமாக வெளியேறி அமெரிக்கா திரும்பவேண்டும் என்று கேட்டுக்கொண்டார். ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க படைகள் அனைத்தையும் உடனடியாக வாபஸ் பெற வேண்டும் என்று குடியரசுக் கட்சியைச் சேர்ந்த வேறு சில முக்கிய தலைவர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர். குடியரசுக் கட்சி இவ்வாறு கூறிவந்த போதிலும் ஆப்கானிஸ்தானில் இருந்து 2013 அல்லது 2014 ம் ஆண்டில்தான் அமெரிக்க படைகள் முழுமையாக வாபஸ் பெறப்படும் என்று அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமாவும், அமெரிக்க ராணுவ தலைவர்களும் கூறிவருகின்றனர். சர்வதேச பயங்கரவாதி ஒசாமா பின்லேடனை பிடிப்பதற்காக ஆப்கானிஸ்தான் மீது அமெரிக்க படைகள் கடந்த 2002 ம் ஆண்டு படையெடுத்தன. அப்போது முதற்கொண்டு இப்போது வரை அமெரிக்க ராணுவத்தின் தலைமையிலான நேட்டோ படைகள் ஆப்கானிஸ்தானில் தொடர்ந்து இருந்து வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony