முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மதுரையில் பணம் வைத்து சூதாடிய 7 போலீசார்தற்காலிக வேலைநீக்கம்

திங்கட்கிழமை, 9 ஜனவரி 2012      தமிழகம்
Image Unavailable

 

மதுரை,ஜன.- 9 - மதுரையில் பணம் வைத்து சூதாடிய 7 போலீசாரை சஸ்பெண்ட் செய்து கமிஷனர் கண்ணப்பன் உத்தரவிட்டுள்ளார்.    மதுரை உத்தங்குடி பகுதியில் சிலர் பணம் வைத்து சூதாடுவதாக போலீஸ் சூப்பிரெண்டு அஸ்ராகார்க்குக்கு தகவல் கிடைத்தது. இதை தொடர்ந்து ஒத்தக்கடை இன்ஸ்பெக்டர் சின்னபாண்டி தலைமையில் போலீசார் அந்த ஓட்டலில் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அங்கு ஒரு அறையில் சிலர் பணம் வைத்து சூதாடி கொண்டிருந்தனர். போலீசாரை கண்டதும் 3 பேர் தப்பி ஓடிவிட்டனர். 9 பேரை போலீசார் மடக்கி பிடித்தனர். சூதாட்டத்தில் ஈடுபட்டதாக மதுரை மீனாட்சி அம்மன் கோவில் போலீஸ் நிலைய சிறப்பு எஸ்ஐ கூத்தபெருமாள், திலகர்திடல் போலீஸ் நிலைய சிறப்பு எஸ்ஐ கருப்பையா, போக்குவரத்து ஏட்டு பாலசுப்பிரமணியன், எஸ்எஸ்காலனி ஏட்டு பாலமுருகன் மற்றும் வேலு, கார் டிரைவர் ஜேம்ஸ் உள்பட 9 பேரை கைது செய்தனர். போலீஸ் விசாரணையில் தப்பி ஓடிய தனுஷ், அசோக், ரவி ஆகியோர் என்பதும் தெரியவந்தது.    பணம் வைத்து சூதாடிய போலீஸ்காரர்கள் மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டது. இதைதொடர்ந்து 2 எஸ்ஐக்கள் உள்பட 7  போலீஸ்காரர்களை சஸ்பெண்ட் செய்து போலீஸ்  கமிஷனர் கண்ணப்பன் உத்தரவிட்டார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!