முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பொங்கலுக்கு கூடுதல் சிறப்பு ரயில் இயக்க பரிந்துரை

செவ்வாய்க்கிழமை, 10 ஜனவரி 2012      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, ஜன.10 - பொங்கல் சிறப்பு ரயில்களில் காத்திருப்போர் பட்டியல் அதிகரித்தால் கூடுதலாக சிறப்பு ரயில்கள் இயக்க பரிந்துரை செய்யப்படும் என சென்னை ரயில்வே கோட்ட மேலாளர் அனந்தராமன் தெரிவித்தார். ரயில் நிலையங்கள், ரயிலகளில் பாதுகாப்புகள் குறித்து மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த சைக்கிள் பயணத்தை சென்னை ரயில்வே கோட்ட மேலாளர் எஸ்.அனந்தராமன் தொடங்கி வைத்தார். சென்னை சென்ட்ரலில் இருந்து 20 பேரும், தாம்பரத்தில் இருந்து 20 பேர் என மொத்தம் 40 சாரண இயக்கத்தினர் தாம்பரம், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், அரக்கோணம், காட்பாடி , ஆம்nullர் வழியாக ஜோலார்பேட்டை சென்றடைவார்கள். அவர்கள் 7 நாட்கள் தினமும் சுமார் 60 கி.மீ. என மொத்தம் 216 கி.மீ. தூரம் பயணம் செய்ய உள்ளனர். வழியெங்கும் மக்களை சந்தித்து ரயில்வே பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு பிரசுரங்களை கொடுப்பார்கள். விழிப்புணர்வு சொற்பொழிவு, நாடகங்களை நடத்துவார்கள்.

இந்நிகழ்ச்சிக்கு பின், அனந்தராமன் கூறியதாவது:- கடந்த 2010-ம் ஆண்டு டிசம்பர் மாத வருவாயை ஒப்பிடும்போது 2011-ம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் 17 சதவீத வருவாய் அதிகரித்துள்ளது. பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்தாலும் போதுமான ரயில்களும், வசதியும் இருப்பதால் கூடுதல் ரயில்கள் இயக்கும் திட்டம் ஏதும் இப்போது இல்லை. பொங்கலுக்கு சிறப்பு ரயில்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதில் இடங்கள் நிறைந்து, காத்திருப்பு பட்டியலில் பயணிகளுக்கு இடம் கிடைப்பதாக சொல்கிறார்கள். அப்படி காத்திருப்போர்களின் பட்டியல் அதிகரித்தால் பொங்கலுக்கு கூடுதல் சிறப்பு ரயில்கள் இயக்குவது குறித்து சென்னைக் கோட்டம் சார்பில் தெற்கு ரயில்வேக்கு பரிந்துரை செய்வோம். இவ்வாறு அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்