முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஈரானில் அமெரிக்கருக்கு மரண தண்டனை

செவ்வாய்க்கிழமை, 10 ஜனவரி 2012      உலகம்
Image Unavailable

டெஹ்ரான், ஜன.10 - ஈரானில் உளவுபார்த்ததாக கைது செய்யப்பட்ட அமெரிக்கர் ஒருவருக்கு அந்நாட்டு நீதிமன்றம் மரணதண்டனை விதித்து தீர்ப்பளித்தது.  அமெரிக்காவைச் சேர்ந்த கடற்படை வீரர் அமீர் மிர்ஸாயி. இவர் ஈராக் மற்றும் ஆப்கானிஸ்தான் நாடுகளில் உள்ள அமெரிக்க ராணுவ தளங்களில் பணியாற்றி வந்தவர். அதன்பிறகு இவர் ஈரானில் உள்ள தனது பாட்டியை பார்ப்பதற்காக ஈரான் சென்றிருந்தார். இந்நிலையில் அவரை ஈரான் அதிகாரிகள் கைது செய்து அவர் மீது வழக்கு பதிவு செய்தனர். இவர் மீதான குற்றச்சாட்டுக்கள் நிரூபணமானதை அடுத்து இவருக்கு ஈரான் கோர்ட்டு மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்தது. 28 வயதான இவர் அமெரிக்காவில் உள்ள அரிசோனா மாகாணத்தைச் சேர்ந்தவர்.  இவரது தந்தை மிச்சிகன் நகரில் வசித்து வருகிறார். அவர் கூறுகையில், தனது மகன் சி.ஐ.ஏ. உளவாளி அல்ல என்றும், ஈரானில் உள்ள தனது பாட்டியை சந்திப்பதற்காகவே தனது மகன் ஈரான் சென்றதாகவும் ஆனால் அவனை ஈரான் அதிகாரிகள் சி.ஐ.ஏ. உளவாளி எனக் கருதி கைது செய்துள்ளதாகவும் தெரிவித்தார். ஈரான் தீவிரவாதத்தை வளர்த்து வருகிறது என்று அமெரிக்க உளவு நிறுவனத்திற்கு மிர்ஸாயி தகவல் கொடுத்ததாக ஈரான் அதிகாரிகள் குற்றம் சாட்டியுள்ளனர். மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள மிர்ஜாயி, ஈரான் சட்டப்படி தனது மரண தண்டனையை எதிர்த்து 20 நாட்களுக்குள் மேல் முறையீடு செய்யலாம்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்