முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வார இதழ் ஆசிரியரை கைது செய்ய கமிஷனரிடம் புகார்

செவ்வாய்க்கிழமை, 10 ஜனவரி 2012      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, ஜன.10 - முதல்வரை பற்றி அவதூறு செய்தி வெளியிட்ட வார இதழ் ஆசிரியரை கைது செய்ய போலீஸ் கமிஷனரிடம் வைஷ்ணவ பேரவை சார்பில் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது. முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் செய்தி வெளியிட்ட நக்கீரன் பத்திரிகை மீதும், அந்த பத்திரிகையின் ஆசிரியர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சென்னை போலீஸ் கமிஷனரிடம் வைஷ்ணவ பேரவை சார்பில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது..

முதல்வர் ஜெயலலிதா பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் நக்கீரன் பத்திரிகை அவதூறான செய்தி வெளியிட்டதை கண்டித்து ஏற்கனவே அவர் மீது ஜாம்பஜார் காவல் நிலையத்தில் புகார் செய்யப்பட்டுள்ளது.  மேலும் அ.தி.மு.க. வழக்கறிஞர் பிரிவு சார்பிலும் புகார் தரப்பட்டுள்ளது. வெளி மாவட்டங்களிலும் புகார்கள் குவிந்த வண்ணம் உள்ளன.

இந்த நிலையில் சென்னை பெரம்nullரை சேர்ந்த ஜெயந்தி என்பவர் வைஷ்ணவ பேரவை சார்பில் சென்னை போலீஸ் கமிஷனர் திரிபாதியிடம் நேற்று புகார் மனு ஒன்றை அளித்தார்.

அந்த மனுவில் கூறப்பட்டிருப்பதாவது: கடந்த 7-ந் தேதி வெளிவந்துள்ள நக்கீரன் வார இதழில் தமிழக மக்களால் ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டு தேசிய சிந்தனையும், தெய்வீக குணமும் கொண்டு நல்லாட்சி செய்கின்ற முதலமைச்சர் ஜெயலலிதா குறித்து உண்மைக்கு புறம்பான அவதூறான செய்தியை கற்பனையில் வெளியிட்டு முதல்வரின் புனிதத்தை கெடுக்கின்ற வகையில் அமைந்துள்ளது. 6 கோடி மக்களால் ஏகமனதாக தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு மாநில முதல்வரை பற்றி அவதூறு செய்தியை பரப்புவது வாக்களித்தவர்களுக்கு மனஉளைச்சலை ஏற்படுத்துவதோடு ஜனநாயகத்தை அவமதிக்கும் செயல்.

மேலும் முதலமைச்சரின் பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் இந்த அவதூறான செய்தி அமைந்துள்ளது. எனவே நக்கீரன் பத்திரிகை மீதும், அந்த பத்திரிகையின் ஆசிரியர் கோபால் மீதும் வழக்குப்பதிவு செய்வதுடன் நக்கீரன் கோபாலை கைது செய்ய வேண்டும். இவ்வாறு ஜெயந்தி அளித்த புகார் மனுவில் கூறியிருக்கிறார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்