முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மலேசிய எதிர்க்கட்சி தலைவர் அன்வர் விடுதலை

செவ்வாய்க்கிழமை, 10 ஜனவரி 2012      உலகம்
Image Unavailable

 

கோலாலம்பூர், ஜன.10 - ஓரினச்சேர்க்கை வழக்கில் மலேசிய எதிர்க்கட்சி தலைவர் அன்வர் இப்ராஹிம் விடுதலை செய்யப்பட்டுள்ளார். மலேசிய எதிர்க்கட்சி தலைவராக இருப்பவர் அன்வர் இப்ராஹிம்.  இவர் சுமார் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு தனது முன்னாள் உதவியாளர் மொகுத் சபைபுல் என்ற 26 வயது இளைஞருடன்  ஓரினச்சேர்க்கையில் ஈடுபட்டதாக அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து அவர் கைது செய்யப்பட்டார்.

இது தொடர்பான வழக்கு கோலாலம்பூர் ஐகோர்ட்டில் நடைபெற்று வந்தது. 

நேற்று இந்த வழக்கில் தீர்ப்பு கூறப்பட்டது.

ஐகோர்ட்டு நீதிபதி  முகம்மது சபிதின் மொகுத்தியா தனது தீர்ப்பில், அன்வர் இப்ராஹிம் குற்றமற்றவர் என்றும் அதனால் அவரை இந்த வழக்கில் இருந்து விடுதலை செய்வதாகவும் உத்தரவிட்டுள்ளார்.

இந்த தீர்ப்பு வருவதற்கு முன்பாக தனது ஆதரவாளர்கள் மத்தியில் பேசிய  அன்வர்  கோர்ட்டு தீர்ப்பு வெளிவந்த பிறகு  தான் இந்த வாரத்தில்  இந்தியாவுக்கு செல்ல இருப்பதாக தெரிவித்தார்.

தான் தனது மனைவியுடன் மும்பைக்கு செல்ல இருப்பதாக அவர் தெரிவித்தார்.

மேலும் அவர் கூறுகையில் துருக்கி அரசாங்கத்தின் அழைப்பின் பேரில்  வருகிற 12 ம் தேதி தான் துருக்கி செல்ல இருப்பதாகவும் அங்கு   இஸ்லாம், சுதந்திரமும் நீதியும் என்ற  தலைப்பில்  உரை நிகழ்த்த இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

மலேசியாவில் அடுத்த பொதுத்தேர்தலுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்க இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

சர்க்கரை நோயினால் ஏற்படும் எரிச்சல், பாத எரிச்சல் - கை கால் எரிச்சல் குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் கட்டிகள் கரைய, குணமாக, அடிபட்ட வீக்கம், காயங்களுக்கு, நரம்பு சிலந்தி, சிலந்தி புண், வீக்கம் ஆற சித்த மருத்துவ குறிப்புக்கள் மஞ்சள் காமாலை குணமாக | கல்லிரல் குறைபாடு நீங்க | இரத்தம் தூய்மையாக | பாண்டு தீர - சித்த மருத்துவ குறிப்புக்கள்
பித்த நோய்கள் குணமாக | பித்த மயக்கம் தீர | பித்த நீர் மலத்துடன் வெளியேற | உடல் உஷ்ணத்தை தணிக்க | கல்லடைப்பு முகப்பரு குணமாக | தழும்புகள், கரும்புள்ளி, பாலுண்ணி நீங்க | மருவு கரப்பான் பிளவை தீர சித்த மருத்துவ குறிப்புக்கள் மூட்டு வலி குணமாக | Natural Home Remedy for Knee & Hip Joint Pain | Arthritis