முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பத்மநாபசுவாமி கோயில் பொக்கிஷம் மதிப்பிடும் பணி தொடக்கம்

திங்கட்கிழமை, 9 ஜனவரி 2012      இந்தியா
Image Unavailable

 

புது டெல்லி, ஜன. - 9 - திருவனந்தபுரம் பத்மநாபசுவாமி கோவிலின் பாதாள அறைகளில் பாதுகாக்கப்பட்டு வரும் பொக்கிஷங்களை மதிப்பீடு செய்யும் பணி இன்னும் 3 மாதங்களில் தொடங்கும் என்று சுப்ரீம் கோர்ட் நியமித்துள்ள ஐவர் குழுவின் புதிய  ஒருங்கிணைப்பாளர் வேலாயுதன் நாயர் தெரிவித்துள்ளார்.  கேரள மாநிலம் தலைநகர் திருவனந்தபுரத்தில் உள்ள பத்மநாபசுவாமி கோவிலின் பாதாள அறைகளில் பல நூற்றாண்டுகளாக பொக்கிஷங்கள் பாதுகாக்கப்பட்டு வந்தன. பல கோடி ரூபாய் மதிப்புள்ள இந்த பொக்கிஷங்களின் மதிப்பு இதுவரை கணக்கிடப்படவில்லை. இந்த நிலயில் கோவில் பொக்கிஷங்களை மதிப்பீடு செய்ய சுப்ரீம் கோர்ட் ஐவர் குழுவின் புதிய தலைவராக தேசிய அருங்காட்சியக மைய தலைவர் வேலாயுதன் நாயரை நியமித்துள்ளது. அவர் தலைமையிலான குழு வரும் 3 மாதங்களில் மதிப்பீடு பணிகளை தொடங்கவுள்ளதாக வேலாயுதன் நாயர் தெரிவித்துள்ளார். இது குறித்து மேலும் கூறிய அவர்,  பத்மநாபசுவாமி கோயில் பாதாள அறைகளில் உள்ள பொக்கிஷங்களின் மதிப்பீட்டு பணி இன்னும் 3 மாதங்களில் தொடங்கும். இதற்கு தேவையான பாதுகாப்பு பணிகள் நடந்து வருகிறது. பொக்கிஷங்களை மதிப்பீடு செய்யும் பணி வரும் ஓராண்டுக்குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. பல்வேறு தொழில்நுட்ப குறைபாடுகளால் மதிப்பீட்டு குழுவால் செயல்பட முடியாமல் இருந்தது. பொக்கிஷங்களை மதிப்பீடு செய்ய தேவையான உபகரணங்கள் பெற்ற பிறகு பணிகள் 3 மாதங்களில் தொடங்கும். மதிப்பீட்டு பணியின் போது பொக்கிஷங்களுக்கு சேதமடையாத வகையில் நவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான சர்வதேச பொருட்காட்சியும் சங்கத்தின் சட்ட திட்டங்கள் பின்பற்றப்படவுள்ளது என்றார்.
 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்