முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நாகை புயல் பாதித்த பகுதிகளில் மத்திய குழுவினர் பார்வை

புதன்கிழமை, 11 ஜனவரி 2012      தமிழகம்
Image Unavailable

 

நாகை,ஜன.11 - நாகை மாவட்டம் குத்தாலம் வட்டம் வானாதிராஜபுரம், சீர்காழி வட்டம், மாதானம் மற்றும் ஆரப்பள்ளம் ஊராட்சிகளில் தானே புயல் பாதிப்புகள் குறித்து மத்திய வேளாண்துறை இயக்குநர் டாக்டர் மனோகரன், மத்திய ர்வள ஆதாரத்துறை கண்காணிப்புப் பொறியாளர் சுந்தரமூர்த்தி ஆகியோர் கொண்ட மத்திய குழுவினர் பார்வையிட்டு பொதுமக்களை சந்தித்து ஆறுதல் கூறினர். இக்குழுவின் மத்திய வேளாண்த்துறைஇயக்குநர் டாக்டர் மனோகரன் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்ட பின் செய்தியாளர்களிடம் தெரிவிக்கையில், கடந்த மாதம் 30​ம் தேதி தானே புயலால் நாகை மாவட்டத்தில் நெற்பயிர்கள், வாழை தோட்டங்கள், சாலைகள், மின்கம்பங்கள் ஆகியவை பாதிக்கப்பட்டுள்ளன. ரூ.106 கோடியே 75 லட்சம் மதிப்பில் இழப்பீடுகள் ஏற்பட்டுள்ளதாக மாவட்டநிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நெற்பயிர்கள், தோட்டப் பயிர்கள், கால்நடைகள், சாலைகள், குடிர் ஆதாரங்கள், மின்சார பாதிப்புகள், மீன்வளத்துறை பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. 50 ஆயிரம் ஹெக்டேர் பரப்பளவில் நெற்பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ளது. 450 ஹெக்டேர் தோட்டப் பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ளது. தமிழக அளவில் தானே புயல் பாதிப்புகள் குறித்து தலைமை செயலகத்தில் நடைபெறும் கூட்டத்தில் அறிக்கை பெறப்பட்டு, மத்திய அரசிடம் சமர்ப்பிக்கப்படும். மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்கும் என தெரிவித்தார்.

இந்த ஆய்வின் போது தமிழக வேளாண்துறை ஆணையர் மணிவாசகம், தனிஅலுவலர் பிரபாகர் ராவ், கலெக்டர் முனுசாமி, மாவட்ட காவல்கண்காணிப்பாளர் ராமர், டி.ஆர்.ஒ. ஆசியா மரியம், திட்ட இயக்குநர் சங்கர், வருவாய் கோட்டாட்சியர் ரெத்தினசாமி, பொதுப்பணித்துறை செயற் பொறியாளர் பக்தவசலம், வேளாண் இணை இயக்குநர் முருகானந்தம், நெடுஞ்சாலைத்துறை கோட்டப் பொறியாளர் காமராஜ், குடிர் வடிகால் வாரிய முதன்மை பொறியாளர் விவேகானந்தா, கண்காணிப்பு பொறியாளர் கிருஷ்ணன், வட்டாட்சியர்கள், வட்டாரவளர்ச்சி அலுவலர்கள் ஆகியோர் ஆய்வின் போது உடனிருந்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago