முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ராமேஸ்வரத்தில் ராஜபக்சே உறவினர் மீது செருப்பு வீச்சு

புதன்கிழமை, 11 ஜனவரி 2012      தமிழகம்
Image Unavailable

ராமேஸ்வரம், ஜன.11 - ராமேஸ்வரத்திற்கு தரிசனம் செய்ய வந்த இலங்கை அதிபர் ராஜபக்சேவின் மைத்துனர் மீது செருப்பு வீசி தாக்கிய ம.தி.மு.க., நாம் தமிழகம் இயக்கத்தினர் 7 பேரை போலீசார் கைது செய்தனர். இலங்கை அதிபர் ராஜபக்சேயின் தங்கை கணவர் திருக்குமரன் நடேசன். இவர் இலங்கை யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த தமிழர். இவர் குடும்பத்துடன் ராமேஸ்வரம் வந்து சாமி தரிசனம் செய்ய வந்து தங்கியுள்ளார். இந்த நிலையில் புரோகிதர் அனந்தபாலு என்பவரின் வீட்டில் சிறப்பு பூஜை செய்துள்ளார். பின்னர் பூழை முடித்துவிட்டு பூஜை பொருட்களை கடலில் கரைத்துவிட்டு மீண்டும் புரோகிதர் வீட்டிற்கு செல்ல முயன்றார். இதுகுறித்து தகவல் அறிந்த ம.தி.மு.க., நாம் தமிழர் கட்சியை சேர்ந்த நிர்வாகிகள் சிலர் புரோகிதரின் வீட்டிற்கு முன்பு கூறி ராஜபக்சேவிற்கு எதிராக கோஷங்கள் எழுப்பி நடேசனுக்கு கருப்பு கொடி காட்டினர். வீட்டிலிருந்து வெளியே வந்த நடேசன் மீது செருப்புக்களை வீசி தாக்கினர். இதில் போலீசாருக்கும் கட்சி நிர்வாகிகளுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர் போலீசார் ம.தி.மு.க., நாம் தமிழர் நிர்வாகிகளை அப்புறப்படுத்திவிட்டு நடேசனை காரில் ஏற்றி  அனுப்பி வைத்தனர். இதில் நடேசனுக்கு காயம் ஏதும் ஏற்படவில்லை. இச்சம்பவம் குறித்து புரோகிதர் அனந்தபாலு கொடுத்த புகாரின் பேரில் ம.தி.மு.க. மாநில இளைஞரணி துணைச்செயலாளர் கராத்தே பழனிச்சாமி, நாம் தமிழர் இயக்க மாவட்ட ஒருங்கிணைப்பாளர் கண்.இளங்கோ மற்றும் நம்புகுமார், வெள்ளைச்சாமி, பாலு, சின்னத்தம்பி, திருமுருகன் ஆகிய 7 பேர் மீது 6 பிரிவுகளில் வழக்குபதிவு செய்து சிறையில் அடைத்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்