முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சுக்ராமுக்கு இடைக்கால ஜாமீன்: சுப்ரீம் கோர்ட்டு

புதன்கிழமை, 11 ஜனவரி 2012      அரசியல்
Image Unavailable

 

புது டெல்லி, ஜன.11 - 1993 ம் ஆண்டு தொலைத் தொடர்பு ஊழல் வழக்கில் குற்றம் சுமத்தப்பட்டுள்ள முன்னாள் மத்திய அமைச்சர் சுக்ராமுக்கு சுப்ரீம் கோர்ட் இடைக்கால ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது.  இந்த வழக்கில் குற்றம் சுமத்தப்பட்டுள்ள தொலைத் தொடர்பு முன்னாள் இணை இயக்குனர் ருனுகோஷ், தனியார் நிறுவன அதிகாரி ராமராவ் ஆகியோருக்கும் இடைக்கால ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது. மூவரும் ஜாமீன் கோரி தனித்தனியாக தாக்கல் செய்திருந்த மனுக்கள் நீதிபதி சதாசிவம் தலைமையிலான அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. மனுக்களை விசாரித்த நீதிமன்றம் அவர்களுக்கு 16 ம் தேதி வரை இடைக்கால ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது. மேலும் மூவருக்கும் ஜாமீனை நீட்டிப்பது குறித்து 16 ம் தேதி விசாரிக்கப்படும். அதற்குள் சி.பி.ஐ. தனது பதிலை நீதிமன்றத்தில் தெரிவிக்க வேண்டும் என்றும் சுப்ரீம் கோர்ட் கேட்டுக் கொண்டுள்ளது. 

கடந்த வியாழக்கிழமை இவர்களின் ஜாமீன் மனுக்களை விசாரிக்க மறுத்த சுப்ரீம் கோர்ட் மூவரும் விசாரணை நீதிமன்றத்தில் சரணடைந்தால் மட்டுமே ஜாமீன் மனுவை விசாரணைக்கு எடுத்துக் கொள்ள முடியும் என்று கூறியிருந்தது. இதையடுத்து அன்றைய தினமே ருனு, ராமராவும் நீதிமன்றத்தில் சரணடைந்தனர். இதையடுத்து இருவரும் சிறையில் அடைக்கப்பட்டனர். உடல்நிலை சரியில்லாததால் சுக்ராம் சரணடையவில்லை என்று கூறப்பட்டது. இந்நிலையில் அவரும் நீதிமன்றத்தில் சரணடைந்தார். அவரது உடல்நிலை மேலும் மோசமடைந்ததை தொடர்ந்து அன்றைய தினமே அவர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டார். 

இந்த வழக்கில் விசாரணை நீதிமன்றம் சுக்ராம் மற்றும் ராவுக்கு 3 ஆண்டு சிறை தண்டனையும், கோஷூக்கு 2 ஆண்டு சிறை தண்டனையும் வழங்கி 2002 ம் ஆண்டு தீர்ப்பளித்தது. இதை டெல்லி உயர்நீதிமன்றம் டிசம்பர் மாதம் 21 ம் தேதி உறுதி செய்தது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்