முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

5 மாநில தேர்தல்: வாஜ்பாய், மோடி பிரச்சாரம்?

புதன்கிழமை, 11 ஜனவரி 2012      அரசியல்
Image Unavailable

 

புது டெல்லி, ஜன.11 - உத்தர பிரதேசம் உள்ளிட்ட 5 மாநில சட்டசபை தேர்தல் பிரச்சாரத்தில் முன்னாள் பிரதமர் வாஜ்பாய், குஜராத் முதல்வர் நரேந்திர மோடி ஆகியோர் ஈடுபடவுள்ளனர். பா.ஜ.க சார்பில் தேர்தல் ஆணையத்துக்கு அளிக்கப்பட்டுள்ள பிரசாரம் மேற்கொள்ளும் தலைவர்கள் பட்டியலில் இவர்கள் இருவரது பெயர்களும் சேர்க்கப்பட்டுள்ளன. 

கடந்த இரு ஆண்டுகளாக உடல்நிலை சரியில்லாத வாஜ்பாயின் பெயர் பா.ஜ.க.வின் பிரச்சார பட்டியலில் முதலில் இடம் பெற்றுள்ளது. எனினும் அவர் பிரச்சாரத்தில் ஈடுபடுவது சந்தேகம்தான் என்று தெரிகிறது. அதே போல் கூட்டணி கட்சியான ஐக்கிய ஜனதா தளத்தின் எதிர்ப்பால் பீகார் தேர்தலில் பிரச்சாரம் செய்யாத நரேந்திர மோடியின் பெயரும் இப்போது பட்டியலில் உள்ளது. முன்னதாக பீகார் தேர்தலில் மோடி பிரச்சாரம் செய்யாததால் உத்தர பிரதேசம் உள்ளிட்ட 5 மாநில தேர்தலில் அவர் பிரச்சாரம் செய்ய அக்ைகப்படுவாரா என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது. இப்போது தேர்தல் பிரச்சாரம் செய்யும் தலைவர்களின் பட்டியலில் மோடியின் பெயர் சேர்த்து அவர் பிரச்சாரத்தில் ஈடுபடுவதை பா.ஜ.க. உறுதி செய்துள்ளது. 

இது தவிர மத்திய பிரதேச முதல்வர் சிவராஜ்சிங் சவுகான், சத்தீஸ்கர் முதல்வர் ரமண்சிங், ஜார்கண்ட் முதல்வர் அர்ஜூன் முண்டா, பீகார் துணை முதல்வர் சுஷில்குமார், மோடி ஆகியோரும் பா.ஜ.க. சார்பில் பிரச்சார களத்தில் இறங்குகின்றனர். முக்கியமாக உத்தரபிரதேசத்தை மையமாக கொண்டு பா.ஜ.க.வின் பிரச்சாரம் அமையவுள்ளது. 

ராஜஸ்தான் முன்னாள் முதல்வவ் வசுந்தரா ராஜே சிந்தியா, பா.ஜ.க.வில் மீண்டும் இணைந்துள்ள உமாபாரதி, கட்சியின் பொதுச் செயலாளர்கள் அனந்த்குமார், ரவிசங்கர் பிரசாத் உள்ளிட்டோரும் திரை நட்சத்திரங்கள் ஹேமமாலினி, சத்ருகன்சின்கா, ஸ்மிருதி இராணி, பா.ஜ.கவில் உள்ள முஸ்லீம் தலைவர்கள் ஷான்வாஸ், உசைன் முக்தர் அப்பாஸ் நக்வி, கிரிக்கெட் வீரர் சித்து ஆகியோரும் தீவிர தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்ளவிருக்கின்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்