முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மலேசியா கலைஞர்களுக்கு விருது: சரத்குமார் வழங்கினார்

வியாழக்கிழமை, 12 ஜனவரி 2012      சினிமா
Image Unavailable

 

சென்னை, ஜன.12 - சென்னையில் மலேசிய இந்திய திரைப்படவிழாவில் மலேசியா திரைப்பட கலைஞர்களுக்கு விருதுகளை நடிகர் சரத்குமார் வழங்கினார். சென்னையில் கடந்த 3 நாட்கள் முதலாவது மலேசியா இந்திய திரைப்பட விழா நடைபெற்றது. இந்த விழாவில் மலேசியாவில் எடுக்கப்பட்ட 10 தமிழ்த் திரைப்படங்களை திரையிட்டனர். 10 தமிழ் படங்களில் 6 திரைப்படங்கள் சிறந்த படங்களாக நேர்ந்தெடுக்கப்பட்டு விருதுகள் வழங்கப்பட்டது.

விருது வழங்கும் விழா நேற்று சென்னை தி.நகரில் உள்ள ஒரு ஹோட்டலில் நடைபெற்றது. விழாவில் நடிகர் சங்க தலைவர் சரத்குமார் எம்.எல்.ஏ. சங்கசெயலாளர் ராதாரவி, மலேசியா மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் சுப்பிரமணியன், மலேசியா மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் மலேசியா கோபால கிருஷ்ணன் எம்.பி.நடிகர்கள் விஜயகுமார், சார்பில் கராத்தேதியாகராஜன், மனோபாலா, பாத்திமா பாபு, ஆகியோர் வாழ்த்தி பேசினார்கள் விழாவில் சிறந்த மலேசியா நடிகராக சசிதரன், சிறந்த நடிகை ஜாஸ்மீன் மைக்கேல், சிறந்த ஒளிப்பதிவாளர் கணேசன், சிறந்த இயக்குநர் வி.நாகராஜ் (படம் உருவம்) சிறந்த கதை அம்சம் உள்ளபடம் ஆண்டாள் , சிறந்த படம் அப்பளம்: விருதுக்கு தேர்வு செய்யப்பட்ட அனைவருக்கும் நடிகர் சரத்குமார் எம்.எல்.ஏ. விருது வழங்கி வாழ்த்தி பேசினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்