முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சமாஜ்வாடி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் மீது வழக்கு

வியாழக்கிழமை, 12 ஜனவரி 2012      அரசியல்
Image Unavailable

 

லக்னோ, ஜன.12 - தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறியது தொடர்பாக உத்தரபிரதேச சமாஜ்வாடி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் மற்றும் அவரது கட்சியைச் சேர்ந்த 36 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். உத்தரபிரதேச மாநிலத்தில் மொத்தமுள்ள 403 சட்டமன்ற தொகுதிகளுக்கு வருகிற மார்ச் மாதம் 7 கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் ஆளும் பகுஜன் சமாஜ் கட்சி, காங்கிரஸ், பா.ஜ.க., சமாஜ்வாடி உள்ளிட்ட முக்கிய அரசியல் கட்சிகள் ஆட்சியைக் கைப்பற்ற தீவிர தேர்தல் பிரச்சாரம் செய்து வருகின்றன. உத்தரபிரதேச சமாஜ்வாடி கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ் சித்தார்த்நகர் என்ற இடத்திலிருந்து சரஸ்வதி நகருக்கு சென்றுகொண்டிருந்தார். அப்போது போலீசாரின் அனுமதி பெறாமல் அவர் பொதுக்கூட்டங்களில் பேசியதாக கூறப்படுகிறது. இது தேர்தல் நடத்தை விதி மீறல் என்றும் எனவே அகிலேஷ் யாதவ் மீதும் அவரது கட்சியைச் சேர்ந்த மேலும் 36 பேர் மீதும் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர் என்று மாவட்ட கலெக்டர் சுனிதா சதுர்வேதி கூறியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்