முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தானே பாதிப்பு: இடைக்கால நிவாரண நிதி ரூ. 500 கோடி

வியாழக்கிழமை, 12 ஜனவரி 2012      இந்தியா
Image Unavailable

 

புது டெல்லி, ஜன. 12 - தானே புயலால் பாதிக்கப்பட்ட தமிழக பகுதிகளுக்கு இடைக்கால நிவாரண நிதியாக ரூ. 500 கோடியும், புதுச்சேரிக்கு ரூ. 125 கோடியும் வழங்கப்படும் என்று பிரதமர் மன்மோகன்சிங் அறிவித்துள்ளார். தானே புயலால் ஏற்பட்ட சேதங்கள் தொடர்பான முதல் கட்ட அறிக்கையின் அடிப்படையில் இந்த நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. எனினும் சேதங்களை நேரில் ஆய்வு செய்து வரும் மத்திய குழுவின் இறுதி அறிக்கை கிடைத்தவுடன் முழுமையான நிவாரண தொகையை மத்திய அரசு அறிவிக்கும். 

கடந்த டிசம்பரம் மாதம் 30 ம் தேதி தமிழக கடலோர பகுதிகளையும், புதுச்சேரியையும் தானே புயல் தாக்கியது. புயலால் தமிழகத்தில் 42 பேர் உயிரிழந்தனர். விளைநிலங்களும், பயிர்களும் பாதிக்கப்பட்டன. தமிழகத்தில் கடலூர் மாவட்டம் கடுமையாக பாதிக்கப்பட்டது. இந்த மாவட்டத்தில் மட்டும் 39 பேர் உயிரிழந்துள்ளனர். 

தானே புயலால் பாதிக்கப்ப்ட கடலூர், விழுப்புரம், நாகப்பட்டினம், திருவாரூர், காஞ்சிபுரம் மற்றும் புதுச்சேரி ஆகியவற்றில் ஏற்பட்டுள்ள சேதங்கள் குறித்து ஆய்வறிக்கை மத்திய அரசிடம் விரைவில் தாக்கல் செய்யப்படும் என்று மத்திய குழுவின் தலைவர் லோகேஷ் ஜா தெரிவித்தார். 

கடந்த டிசம்பர் 30 ம் தேதி தாக்கிய தானே புயலினால் ஏற்பட்ட சேதங்களை மதிப்பிட மத்திய உள்துறை இணை செயலாளர் லோகேஷ் ஜா தலைமையில் அதிகாரிகள் குழுவை மத்திய அரசு அமைத்தது. வேளாண்மை, குடிநீர், நிதி, சுகாதாரம், மின்சாரம், ஊரக மேம்பாடு, நீர்வளம், சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை ஆகிய அமைச்சகங்களை சேர்ந்த அதிகாரிகளும், தேசிய பேரிடர் மேலாண்மை மற்றும் திட்டக்குழுவை சேர்ந்த அதிகாரிகளும் இக்குழுவில் இடம் பெற்றுள்ளனர். 

17 பேர் கொண்ட மத்திய குழுவினர் தானே புயலால் பாதிக்கப்பட்ட கடலூர், விழுப்புரம், நாகப்பட்டினம், திருவாரூர், காஞ்சிபுரம் மற்றும் புதுச்சேரி மாநிலத்தில் சுற்றுப்பயணம் செய்து சேத விவரங்களை ஆய்வு செய்தது. இக்குழுவினர் தலைமை செயலகத்தில் தமிழக அரசின் வருவாய்த்துறை செயலாளர் ராஜகோபாலை சந்தித்தனர். சுமார் 45 நிமிடங்கள் இந்த சந்திப்பு நடைபெற்றது. சந்திப்புக்குப் பின் செய்தியாளர்களிடம் லோகேஷ் ஜா கூறும் போது, 

தானே புயலினால் பாதிக்கப்பட்ட கடலூர், விழுப்புரம், நாகப்பட்டினம், திருவாரூர், காஞ்சிபுரம் மற்றும் புதுச்சேரி மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் நாங்கள் ஆய்வு மேற்கொண்டோம். பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து சேதங்களை கேட்டறிந்தோம். புயலினால் இப்பகுதிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. பாதிக்கப்பட்ட பகுதிகளில் நிவாரண மற்றும் மீட்பு பணிகளில் மாநில அரசுகள் முனைப்புடன் ஈடுபட்டுள்ளன. சேத விவரங்கள் குறித்த அறிக்கையை விரைவில் மத்திய அரசுக்கு அளிப்போம் என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்