முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அனைத்து வாக்குச் சாவடிகளிலும் வெப் கேமிரா - குரேஷி

புதன்கிழமை, 16 மார்ச் 2011      தமிழகம்
Image Unavailable

 

புதுச்சேரி, மார்ச்.16 - சட்டசபை தேர்தலின் போது புதுவையில் அனைத்து வாக்குச்சாவடிகளிலும் வெப் காமிரா பொறுத்தப்படும் என்றும், அடையாள அட்டை கிடைக்காத வாக்காளர்களுக்கு வரும் 30-ந் தேதிவரை அடையாள அட்டை பெற ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது என்றும் தலைமை தேர்தல் ஆணையர் குரோஷி நேற்று புதுவையில் தெரிவித்தார். 

இந்திய தலைமை தேர்தல் ஆணையர் குரோஷி நேற்று புதுவை வந்தார். பின்னர் அவர் புதுவை தலைமை செயலகத்தில் நண்பகல் 12 மணிமுதல் காங்கிரஸ், அ.தி.மு.க., தி.மு.க., கம்யூனிஸ்டு உள்பட 9 அரசியல் கட்சியினருடன் கருத்துக்களை கேட்டறிந்தார். இதையடுத்து தேர்தல் அதிகாரி மற்றும் காவல்துறை உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். பின்னர் குரோஷி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

புதுவையில் 100 சதவீதம் வாக்காளர் அடையாள அட்டை விநியோகம் செய்யப்பட்டுள்ளது. ஆனால் அரசியல் கட்சியினர் சிலருக்கு அடையாள அட்டை கொடுக்கப்படவில்லை. எனவே அரசு ஆவணங்களில் ஒன்றை வைத்து ஓட்டுப்போட அனுமதியளிக்க வேண்டும் என்று கோரினர். வரும் 30-ந் தேதிவரை அடையாள அட்டை வாங்காதவர்கள் வாங்கிக் கொள்ள அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. தேர்தலில் வாக்காளர்களை கண்காணிக்க 10 பறக்கும் படை முன்பு அமைக்கப்பட்டு இருந்தது. இப்போது அதை 30 ஆக அதிகரித்துள்ளோம். 

ஒவ்வொரு தொகுதிக்கும் ஒரு பறக்கும்படை கண்காணிப்பில் ஈடுபடும். புதுவையில் 854 வாக்குச்சாவடிகளும், 16 துணை வாக்குச்சாவடிகளு ம் அமைக்கப்படுகின்றன. அனைத்து வாக்குச்சாவடிகளும் வெப் காமிரா மூலம் கண்காணிக்கப்படும். புதுச்சேரி உள்ளிட்ட 5 மாநிலங்களிலும் புகார் அளிக்க 1965 என்ற எண்ணை தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம். இது கட்டணமில்லா தொலைபேசி. 

தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்த பின் முதல்வர் நிவாரண நிதியை முன்தேதியிட்டு மக்களுக்கு வழங்கியுள்ளதாக புகார் வந்துள்ளது. அதுபற்றி அரசு தலைமை செயலாளர் விசாரித்து அறிக்கை தாக்கல் செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளார். 

வேட்பாளர்கள் வங்கி மூலம் பணம் எடுத்து வரவு-செலவு செய்ய ஏதுவாக தனி கவுண்டர்கள் அமைக்க மாவட்ட தேர்தல் அதிகாரி மூலம் வங்கி மேலாளர்களிடம் ஆலோசனை நடத்தி முடிவு செய்ய அறிவுறுத்தியுள்ளேன். வேட்பாளர் தனது உதவியாளர் மூலம் பணம் எடுக்க ஜாயிண்ட் அக்கவுண்ட் தொடங்கலாம். நமது தேர்தல் முறை சம்பந்தமாக ரஷ்யா ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தம் போட்டுள்ளது. 

தேர்தல் ஆணையமே பூத் சிலிப்பை வாக்காளர்களுக்கு கொடுக்க உள்ளது. எனவே அரசியல் கட்சிகள் பூத் சிலிப் தர வேண்டியதில்லை. புதுவையில் 85 சதவீதம் வாக்கு பதிவாகிறது. மற்ற மாநிலங்களில் புதுவையை விட ஓட்டுப்பதிவு குறைவாக உள்ளது. ஏனாம் தொகுதியில் தேர்தல் நடைபெறும் நேரத்தில் பிற மாநிலத்தவர் உள்ளே வராமல் இருக்க போதுமான பாதுகாப்பு போடப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago