முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

5 மாநில தேர்தலையொட்டி தனி தெலுங்கானா கோரிக்கை நிறுத்திவைப்பு: சந்திரசேகர ராவ்

வியாழக்கிழமை, 17 மார்ச் 2011      இந்தியா
Image Unavailable

 

ஐதராபாத்,மார்ச்.- 17 - தமிழகம், கேரளம் உள்பட 5 மாநிலங்களில் சட்டமன்ற தேர்தல் நடக்கவுள்ளதையொட்டி தனிதெலுங்கானா கோரிக்கையை வரும் மே மாதம் முடிய நிறுவத்திவைப்பதாக சந்திரசேகரராவ் அறிவித்துள்ளார்.  ஆந்திர மாநிலத்தை இரண்டாக பிரித்து தனி தெலுங்கானா மாநிலம் அமைக்க வேண்டும் என்று கடந்த பல ஆண்டுகளாக தெலுங்கானா ராஷ்ட்ரீய சமீதி கட்சி போராட்டம் நடத்தி வருகிறது. தனி தெலுங்கானா அமைப்பது குறித்து மக்களிடத்தில் கருத்தறிய அமைக்கப்பட்ட நீதிபதி ஸ்ரீகிருஷ்ணா கமிட்டி, தனி தெலுங்கானா அமைக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு சிபாரிசு செய்தது. இதையடுத்து மத்திய அரசு தனிதெலுங்கானா மாநிலம் அமைக்க சட்டம் பிறப்பிக்க வேண்டும் என்று டி.ஆர்.எஸ். கட்சி போராடி வருகிறது. 

இந்தநிலையில் டி.ஆர்.எஸ். கட்சி தலைவர் சந்திரசேகரராவ் தலைமையில் நிர்வாகிகள் கூட்டம் நேற்று ஐதராபாத்தில் நடைபெற்றது. பின்னர் சந்திரசேகரராவ் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில் தனி தெலுங்கானா குறித்து 5 மாநில தேர்தலுக்கு பின்னர் ஒரு சாதகமான அறிவிப்பை வெளியிடப்படும் என்று காங்கிரஸ் தலைமை அறிவித்துள்ளது என்றார். மேலும் மாணவர்களுக்கு தேர்வு நேரம் என்பதாலும் தனித்தெலுஙகானா போராட்டத்தை தற்காலிகமாக அதாவது வரும் மே மாதம் கடைசி வரை நிறுத்திவைப்பதென்று முடிவு செய்யப்பட்டுள்ளது. தேர்தலுக்கு பிறகு சாதகமான தீர்ப்பு வராவிட்டால் போராட்டம் கடுமையாக்கப்பட்டு தொடரும் என்பதை அறிவிக்கிறேன் என்று மேலும் அவர் கூறினார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago