முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

டி.என்.பி.எஸ்.சி. தலைவர் செல்லமுத்து ராஜினாமா ஏற்பு

வெள்ளிக்கிழமை, 20 ஜனவரி 2012      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, ஜன. 20 - டி.என்.பி.எஸ்.சி. தலைவர் செல்லமுத்துவின் ராஜினாமா கடிதத்தை அரசு ஆய்வு செய்து, அவரது ராஜினாமாவை தமிழக அரசு ஏற்றுக்கொண்டுள்ளது. தமிழக அரசு பணியாளர்களை தேர்வு செய்யும் டி.என்.பி.எஸ்.சி. தலைவராக இருந்தவர் செல்லமுத்து. டி.என்.பி.எஸ்.சி. தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வுகளில் முறைகேடு செய்ததாக இவர் மீது புகார்கள் எழுந்தன. இதையடுத்து லஞ்ச ஒழிப்பு போலீசார் அவரது வீட்டில் அதிரடி சோதனை நடத்தி முக்கிய ஆவணங்களை கைப்பற்றினார்கள்.

செல்லமுத்துவிடம் லஞ்ச ஒழிப்புப் போலீசார் விசாரணையும் நடத்தினார்கள். அதன் அடிப்படையில் டி.என்.பி.எஸ்.சி. தலைவர் பதவியில் இருந்து செல்லமுத்து ராஜினாமா செய்தார். அவர் தன் ராஜினாமா கடிதத்தை கடந்த வியாழக்கிழமை கவர்னர் ரோசய்யாவை சந்தித்து கொடுத்தார். அந்த ராஜினாமா கடிதத்தை அரசுக்கு கவர்னர் அனுப்பி வைத்தார்.

செல்லமுத்துவின் ராஜினாமா கடிதத்தை அரசு ஆய்வு செய்தது. பிறகு அவரது ராஜினாமாவை தமிழக அரசு ஏற்றுக்கொண்டது. இதற்கான அதிகாரப்nullர்வ அறிவிப்பு  நேற்றுமுன்தினம் வெளியிடப்பட்டது. அதில் புதன்கிழமை மாலை முதல் செல்லமுத்து டி.என்.பி.எஸ்.சி. தலைவர் பதவியில் இருந்து விடுவிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

1976-​ம் ஆண்டு ஐ.ஏ.எஸ். பேட்சைச் சேர்ந்த செல்லமுத்து மீது லஞ்ச ஒழிப்பு போலீசார் 2 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்திருப்பது குறிப்பிடத்தக்கது. அரசு பணி தேர்வு எழுதியவர்களில் 53 பேரிடம் சமீபத்தில் லஞ்ச ஒழிப்புப் போலீசார் விசாரணை நடத்தியபோது, அவர்கள் இடைத்தரகர்கள் மூலம் லட்சக்கணக்கில் பணம் கொடுத்ததை ஒத்துக்கொண்டனர். இதனால் செல்லமுத்துவுக்கும், டி.என்.பி.எஸ்.சி. தேர்வாணைய உறுப்பினர்கள் 13 பேருக்கும் கடும் நெருக்கடி ஏற்பட்டு இருக்கிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்