முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கலாம் இலங்கை பயணம்: மும்மெழி கல்வித்திட்டத்தை துவக்கிவைக்கிறார்

சனிக்கிழமை, 21 ஜனவரி 2012      தமிழகம்
Image Unavailable

சென்னை, ஜன.- 20 - இலங்கையில் மும்மெழிக் கல்வித் திட்டத்தை துவக்கி வைக்க முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம்  கொழும்பு செல்கிறார். இலங்கையில் தமிழர்களுக்கு சம உரிமை அளிக்க மறுத்து வரும் அதிபர் ராஜபக்சே, உலக நாடுகளை ஏமாற்ற பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில், இலங்கையில் மும்மொழி கல்வித் திட்டத்தை ராஜபக்சே அமல்படுத்த உள்ளார். இதற்கான தொடக்க விழா இன்று மாலை கொழும்பில் உள்ள பண்டாரநாயக நினைவு மண்டபத்தில் நடைபெற உள்ளது. இந்த விழாவில் முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் கலந்து கொண்டு, ராஜபக்சேயுடன் சேர்ந்து மும்மொழி கல்வித் திட்டத்தை அறிமுகப்படுத்தவுள்ளார். திங்கட்கிழமை யாழ்ப்பாணம் செல்லும் கலாம் அங்கு பல்கலைக்கழக மாணவர்கள் ஏற்பாடு செய்துள்ள கூட்டத்தில் பேசுகிறார். அதே போல கொழும்பு, மெரதுவா ஆகிய பல்கலைக்கழகங்களிலும் அவர் உரையாற்றுகிறார்.மேலும் இலங்கை விஞ்ஞானிகளையும் அவர் சந்திக்கவுள்ளார். தனது 4 நாள் இலங்கை சுற்றுப் பயணத்தை முடித்துக் கொண்டு செவ்வாய்கிழமை அவர் இந்தியா திரும்புவார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago