முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இளையான்குடியில் அம்மா பேரவை சார்பில் எம்.ஜி.ஆர் பிறந்தநாள்விழா

சனிக்கிழமை, 21 ஜனவரி 2012      தமிழகம்
Image Unavailable

சிவகங்கை ஜன.- 21 - இளையான்குடியில் அம்மா பேரவை சார்பில் எம்.ஜி.ஆர் பிறந்த நாள்விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. இளையான்குடி அம்மா பேரவை சார்பில் புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர் அவர்களின் 95வது பிறந்த நாள் விழா இளையான்குடி அம்மா பேரவை நகர செயலாளர் நாகூர்மீரா தலைமையில் இளையான்குடி பேரூராட்சி தலைவர் அயூப்அலிகான் மற்றும் முன்னாள் நகர செயலாளர் அப்துல்குலாம் முன்னிலையில் நடைபெற்றது. இளையான்குடி பஜார் அருகில் உள்ள பேரறிஞர் அண்ணா நினைவுதூண் அருகே கொடியேற்றி வைத்து சர்க்கரை பொங்கலும் வைத்து ஏழை,எளியோருக்கும் பொதுமக்களுக்கு வழங்கி கொண்டாடப்பட்டது. நிகழ்ச்சியில் அஜ்மல்கான், அக்பர்அலி, செல்வம், கதிரேசன், சோதுகுடி, தாஜ்மைதீன், சதாசிவம், ஜபாருல்லா, சிக்கந்தர், அபுபக்கர், சிராஜூதின் உள்ளிட்ட நிர்வாகிகளும் பொதுமக்களும் கலந்துகொண்டனர்.

படம் விளக்கம். இளையான்குடியில் அம்மா பேரவை சார்பில் எம்.ஜி.ஆர் பிறந்தநாளை முன்னிட்டு பொங்கல் வைத்து கொண்டாடினர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்