முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கூடங்குளம் அணுமின் நிலையம் செயல் படுத்தப்படும்: வாசன்

சனிக்கிழமை, 21 ஜனவரி 2012      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, ஜன.22 - கூடங்குளம் அணுமின் நிலையம் கட்டாய விரைவில் செய்யபட துவங்கும் இது பற்றி பிப்.4ல் நெல்லையில் பொதுக்கூட்டம் நடத்தப்படும் என்று ஜி.கே.வாசன் கூறினார். சென்னை சத்திய மூர்த்தி பவனுக்கு வந்த மத்திய அமைச்சர் ஜி.கே.வாசன் செய்தியாளர்களிடம் பேசினார் அப்போது அவர் கூறியதாவது. இலங்கை தமிழர்கள் பிரச்சனையில் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் 4 நாட்கள் இலங்கையில் பயணம் மேற்கொண்டு அங்குள்ள நிலைமையை ஆய்வு செய்தார்.

இலங்கையில் வாழும் தமிழர்களுக்கு நியாயம் கிடைக்க தமிழர்கள் வளர்ச்சி பெற வளர்ச்சி பணிகளை பார்வையிட்டார்.

இலங்கையில் தமிழர் பகுதியில் ரயில்வே பணிகளை மேம்படுத்த ரூ.800 கோடி முதல்கட்டமாக வழங்கப்பட்டுள்ளது. மேலும் ரூ.4 ஆயிரம் கோடி அளவில் ரயில்வே பணிகள் மேற்கொள்ளப்படும் இலங்கை தமிழ் இளைஞர்கள் இன்ஜினியரிங் மற்றும் மேற்படிப்பு படிக்க வசதியாக நூறுகோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது.

சிங்களவர்களுக்கு இணையாக தமிழர்களும் உதிய அதிகாரம் கிடைக்க மத்திய அரசு வலியுறுத்தும் இலங்கை சட்டம் 13-வது பிரிவை அமுல் படுத்த மத்திய அரசு வலியுறுத்தும்

கூடங்குளம் விவகாரத்தில் விஞ்ஞானிகள் வல்லூனர்கள் பல முறை ஆய்வு செய்து அதன் உண்மைகளை விளக்கி உள்ளனர்.

கூடங்குளம் அணுமின் நிலைய தேவைகள் அவசியங்களை வலியுறுத்தி வரும் பிப்-4ம் தேதி நெல்லையில் காங்கிரஸ் சார்பாக மாபெரும் பொதுக்கூட்டம் நடத்த உள்ளோம் அதற்கு பின் கூடங்குளம் அணுமின் நிலையம் துவங்கும் என்று நம்புகிறேன்.

நாட்டின் மின் தேவைக்கு அணுமின் நிலையம் அவசியம் இவ்வாறு கி.கே.வாசன் பேசினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்