முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கேரளாவில் காங்கிரஸ் கூட்டணி கட்சிகளிடையே தொகுதி பங்கீடு

வியாழக்கிழமை, 17 மார்ச் 2011      அரசியல்
Image Unavailable

திருவனந்தபுரம்,மார்ச்.- 17 - கேரளாவில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி கட்சிகளிடையே தொகுதி உடன்பாடு ஏற்பட்டுள்ளது. காங்கிரஸ் 81 தொகுதிகளில் போட்டியிடுகிறது.  கேரள மாநிலத்தில் இடது கம்யூனிஸ்ட் தலைமையில் இடதுசாரி ஜனநாயக முன்னணியும் காங்கிரஸ் தலைமையில் ஐக்கிய ஜனநாயக முன்னணியும் செயல்பட்டு வருகின்றன. இடது கம்யூனிஸ்ட் தலைமையிலான கூட்டணி கட்சிகளிடையே தொகுதி உடன்பாடு ஏற்பட்டுவிட்டது. காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி கட்சிகளிடையே தொகுதி உடன்பாடு குறித்து பேச்சுவார்த்தை இழுபறி நிலையில் இருந்தது. தற்போது இழுபறி நிலை முடிந்து பேச்சுவார்த்தையில் தொகுதி உடன்பாடு ஏற்பட்டுள்ளது. கேரளாவில் மொத்தம் உள்ள 140 தொகுதிகளில் காங்கிரஸ் 81 தொகுதிகளில் போட்டியிடுகிறது. மீதமுள்ள 59 தொகுதிகளில் கூட்டணி கட்சிகள் போட்டியிடுகின்றன.
இந்தியன் யூனியன் முஸ்லீம் லீக் கட்சிக்கு 24 தொகுதிகளும், கேரள காங்கிரஸ்(எம்)15, சோஷலிஸ்ட் ஜனதா ஜனநாயக கட்சிக்கு 12,ஜனாதிபாத்யா சம்ரக்ஷனா சமிதி 4, கேரள காங்கிரஸ்( ஜேக்கப்) 4,சி.எம்.பி.க்கு 3, கேரள காங்கிரஸ் (பி)2, ஆர்.எஸ்.பி.கட்சிக்கு ஒரு தொகுதியும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. கேரள காங்கிரஸ் (எம்) முதலில் தங்களுக்கு 22 தொகுதிகள் ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்று கோரி வந்தது என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது தொகுதி பங்கீடுதான் முடிவடைந்துள்ளது. எந்தெந்த கட்சிகள் எந்தெந்த தொகுதிகளில் போட்டியிடும் என்பது குறித்து நாளை முடிவு செய்யப்பட உள்ளது என்று காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. தமிழகத்தை போல் கேரளாவிலும் வருகின்ற ஏப்ரல் மாதம் 13-ம் தேதி சட்டசபை தேர்தல் நடக்க உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.  
 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago