முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கபாலீஸ்வரர் கோயிலில் தேர்த்திருவிழா லட்சக்கணக்கில் குவிந்தனர்

வியாழக்கிழமை, 17 மார்ச் 2011      ஆன்மிகம்
Image Unavailable

சென்னை, மார்ச் - 17 - மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலில் தேர்த்திருவிழா நேற்று நடைபெற்றது. இதில் லட்சக்கணக்கில் பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கற்பகாம்பாள் கோயிலில் இம்மாதம் 10-ந் தேதி கொடியேற்றத்துடன் பங்குனி பெருவிழா தொடங்கியது.இவ்விழாவில் முக்கிய அம்சமான தேர்த்திருவிழா நேற்று நடைபெற்றது. காலை 6.30 மணிக்கு கபாலீஸ்வரர் தேரில் எழுந்தருளினார். அதை தொடர்ந்து பூஜைகள் நடத்தப்பட்டது. சரியாக 7.15 மணிக்கு பக்தர்கள்  வடம் பிடித்து இழுக்க தேர் பவனி தொடங்கியது. முதலில் சிறிய தேரில் விநாயகர் செல்ல, இறுதியாக கபாலீஸ்வரர் இருந்த பெரிய தேர் சென்றது.
கோயிலின் 4 மாட வீதிகளிலும் வலம் வந்த தேர் மீண்டும் நிலைக்கு வந்தது. நிலைக்கு வந்த பின்னரும் பக்தர்கள் ஏராளமாக வந்து கபாலீஸ்வரருக்கு கற்பூரம் ஏற்றி தரிசனம் செய்தனர். மாடவீதியை தேர் சுற்றும்போது வடம் பிடித்து இழுத்த பக்தர்கள் மீது மாடி வீடுகளில்  இருந்து தண்ணீர் ஊற்றினர். அந்த பகுதியை சேர்ந்த தொழிலதிபர்கள் பக்தர்களுக்கு நீர் மோர் உள்ளிட்ட குளிர் பானங்கள் கொடுத்து உபசரித்தனர். அன்னதானமும் வழங்கப்பட்டது.
இக்கோயிலின் மற்றொரு முக்கிய அம்சமான 63 நாயன்மார்கள் விழா நேற்று மாலை 3.30 மணிக்கு நடைபெற்றது. இந்த விழாவிற்கு மயிலாப்பூர் மட்டுமின்றி சென்னையின் பல்வேறு பகுதிகளில் இருந்து பக்தர்கள் லட்சக்கணக்கில் வந்து கபாலீஸ்வரரை தரிசனம் செய்தார்கள்.  கோயிலின் அறங்காவலர் குழுத் தலைவர் நல்லி குப்புசாமி, அறங்காவலர்கள், நிர்வாக அதிகாரி ஜெயராமன் ஆகியோர் அனைத்து ஏற்பாடுகளையும் செய்திருந்தனர்.
 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்