முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆயிரம் ரூபாய்க்காக புதுகையில் அண்ணன்-தம்பி கொலை

செவ்வாய்க்கிழமை, 24 ஜனவரி 2012      தமிழகம்
Image Unavailable

 

விராலிமலை,ஜன.24 - புதுக்கோட்டை அருகே ஆயிரம் ரூபாய்க்காக நடந்த கடன் தகராறில் அண்ணன், தம்பியை உளியால் குத்தி படுகொலை செய்த ஆசாரி உள்ளிட்ட 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை வடக்கு தெருவைச்சேர்ந்தவர் அய்யப்பன். இவரது அண்ணன் நீலகண்டன் ஆகிய இருவரும் சேர்ந்து அப்பகுதியில் தச்சு வேலை செய்து வந்த கார்த்திக் என்பவருக்கு கடனாக ரூபாய் ஆயிரம் கொடுத்துள்ளனர்.

நீண்ட நாட்களாக இந்த பணத்தை கார்த்திக் திருப்பி தரவில்லை என தெரியவருகிறது. இதையடுத்து சம்பவத்தன்று இரவு அய்யப்பன் தனது சித்தப்பா மகன் ரமேஷ்(26) என்பவருடன் சென்று கார்த்திக்கை சந்தித்து கடனை திருப்பிக் கேட்டுள்ளனர். அப்போது கார்த்திக்குடன் அவரது நண்பர்கள் மணிகண்டன், சண்முகம் ஆகியோரும் இருந்துள்ளனர். வாக்குவாதம் முற்றி மோதலான சூழலில் கார்த்திக் உள்ளிட்ட 3பேரும் சேர்ந்து உளியால் அய்யப்பனையும், ரமேஷையும் சரமாரியாக குத்தியுள்ளனர். இதில் மார்பு, வயிறு, என பல இடங்களில் குத்துப்பட்ட அய்யப்பனும், ரமேசும் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து இறந்தனர்.

இதுபற்றி அய்யப்பனின் அண்ணன் நீலகண்டனுக்கு தெரியவந்தது. அவர் தந்த புக”ரின் பேரில் விராலிமலை போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆறுமுகம் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அய்யப்பன், ரமேஷ் இருவரது உடலையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தார்.

பின்னர் வழக்கு பதிந்து கார்த்திக், மணிகண்டன், சண்முகம் 3 பேரையும் கைது செய்து விசாரித்து வருகிறார்.  ஆயிரம் ரூபாய்க்காக நடந்த இந்த இரட்டை கொலை புதுக்கே”ட்டையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!