முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

காரைக்குடி முத்துமாரியம்மன் பால்குட பெருவிழா லட்சக்கணக்கானோர் பங்கேற்றனர்.

வியாழக்கிழமை, 17 மார்ச் 2011      ஆன்மிகம்
Image Unavailable

காரைக்குடி, மார்ச்.- 17 - காரைக்குடி முத்துமாரியம்மன் கோவிலில் மாசி பங்குனி திருவிழாவை முன்னிட்டு லட்சக்கணக்கானோர் பால்குடம் எடுத்தனர். காரைக்குடி முத்துமாரியம்மன் கோவிலில் பால்குடம் எடுப்பதாக வேண்டிக்கொண்டால் நினைத்த காரியம் நிறைவேறும் என்பதால் வருடாவருடம் பால்குடம் எடுப்பவரின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே வருகிறது. இந்த ஆண்டு மாசி பங்குனி திருவிழா கடந்த 8ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. 8ம் நாளான நேற்று முன்தினம் கரகம், முளைப்பாரி பக்தர்களால் எடுக்கப்பட்டது.
9ம் நாளான நேற்று அதிகாலை முதலே காரைக்குடி முத்தாலம்மன் திருக்கோவிலில் இருந்து அக்னி சட்டி, பால்குடம், வேல் காவடி, பறவை காவடி மற்றும் உடல் முழுவதும் அலகு குத்திக்கொண்டு நகரின் முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக வந்து கோவிலை அடைந்தனர். தங்களது நேர்த்தி கடன்களை செய்தனர். சிவகங்கை, ராமநாதபுரம், மதுரை, புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களைச்சேர்ந்த பக்தர்கள் லட்சக்கணக்கில் பால்குடம் எடுத்து தங்களது நேர்த்தி கடனை செலுத்தினர். இந்த திருவிழாவை முன்னிட்டு பள்ளி, கல்லூரிகளுக்கு உள்ளூர் விடுமுறை விடப்பட்டது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்