முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

டிசம்பர் மாதத்திற்குள் மின்பற்றாக்குறை படிப்படியாக நீங்கும்

புதன்கிழமை, 25 ஜனவரி 2012      அரசியல்
Image Unavailable

 

கொடைக்கானல், ஜன. 25 - மார்ச், ஆகஸ்ட், டிசம்பர் மாதங்களுக்குள் தமிழகத்தில் மின் பற்றாக்குறை படிப்படியாக நீங்கும் என்று தமிழக மின்துறை அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் கூறினார்.  கொடைக்கானலில் துணை மின் நிலையத்தில் புதிதாக 2 கோடியே 15 லட்சம் ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ள 10 எம்.வி.ஏ. திறன் கொண்ட டிரான்ஸ்மீட்டர் துவக்கவிழா பிரகாசபுரம் துணை மின்நிலைய வளாகத்தில் நடந்தது. விழாவிற்கு தலைமை பொறியாளர் சுந்தரம் தலைமை வகித்தார். கண்காணிப்பு பொறியாளர் குமரேசன், நகர் மன்ற தலைவர் கோவிந்தன், கலெக்டர் நாகராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். புதிய டிரான்ஸ்மீட்டரை துவக்கி வைத்து அமைச்சர் விஸ்வநாதன் பேசியதாவது, 

மின் பற்றாக்குறையை போக்க முதல்வர் துரித நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். தமிழகத்தில் நிலவும் மின் பற்றாக்குறை மார்ச், ஆகஸ்ட், டிசம்பர் மாதங்களுக்குள் படிப்படியாக முழுமையாக நீங்கி உபரியாக இருக்கும். இவ்வாறு அவர் பேசினார். 

இந்நிகழ்ச்சியில் ஒன்றிய சேர்மன் ராதாகிருஷ்ணன், ஒன்றிய துணை சேர்மன் பொன்னுதுரை, மின்வாரிய ஏ.டி. கண்ணன் உட்பட மின்துறை அதிகாரிகள் பலரும் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!