முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தயாநிதி - கலாநிதிமாறன் தூண்டுதலின் பேரில் மிரட்டல்

புதன்கிழமை, 25 ஜனவரி 2012      சினிமா
Image Unavailable

 

சென்னை, ஜன.25 - கேபிள் டி.வி. ஆபரேட்டர்களை எஸ்.சி.வியில் இணையும் படி தயாநிதிமாறன் - கலாநிதிமாறன் தூண்டுதல் பேரில் சமூக விரோதிகள் மிரட்டுவதாக தமிழ் நாடு கேபிள் டிவி உரிமையாளர் சங்கத்தினர் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளனர். இது பற்றிய விபரம் வருமாறு: கடந்த தி.மு.க. ஆட்சியில் ஆளுங்கட்சி ஆதரவுடன் மாறன் சகோதர்களின் எஸ்.சி.வி. நிறுவனம் கேபிள் டி.வி. மூலம் ஒளிப்பரப்பு நடைபெற்றது. மற்ற கேபிள் நெட்ஒர்க்குகளும் மிரட்டப்பட்டனர். கேபிள் அப்ரேட்டர்களும் மிரட்டப்பட்டனர்.

இந்த நிலையை மாற்றி அரசு கேபிள் டிவியை கொண்டு வருவேன் என்று தேர்தலில் போது ஜெயலலிதா உறுதி அளித்திருந்தார் அதன் படி அ.தி.மு.க. ஆட்சி பொறுப் பேற்றவுடன் அரசு கேபிள் டிவியை கெண்டு வந்து ஒளிபரப்பை தீவிர படுத்தி வருகிறாம். இதனால் எஸ்.சி.வி. ஆதிக்கம் ஒழிந்தது.

இதனிடையே அரசு கேபிளில் இணையும் ஆபரேட்டர்களை மறை முகமாக மிரட்டும் வேலையையும் எஸ்.சி,வி நிர் வாகத்தினர் செய்து வருகின்றனர். இது பற்றிய புகாரை தமிழ்நாடு கேபிள் டிவி உரிமையாளர் சங்க தலைவர் சகிலன் தலைமையில் நேற்று கமிஷனர் திரிபாதியிடம் புகார் அளிக்கப்பட்டது.

அவர்கள் அளித்துள்ள புகாரில் தெரிவித்திருப்பதாவது எங்கள் சங்கத்தின் மூலம் சென்னை மற்றும் தமிழகமெங்கும் அரசு கேபிள் டிவி நிறுவனம் மற்றும் ஜாக் கேபிள் நிறுவனம் மூலம் பொது மக்களுக்கு சேவையற்றி வருகிறோம்.

தற்ப்போது கடந்த பல மாதங்களாக முன்னாள் மத்திய அமைச்சர் தயா நிதிமாறன் மற்றும் சன் குழும அதிபர் கலாநிதிமாறன் தூண்டுதலின் பேரில் எஸ்.சி.வி. ஊழியர்கள் விட்டல் சம்பத்குமார், ராஜேஷ் கந்தசாமி சோமு ஆகியோர் எம்.எம்.டி.ஏ. வைச்சேர்ந் சமூக விரோதி ரபீக்ராசா முலம் எங்களது பல ஆபரேட்டர்களை எஸ்.சி.வியில் இணையும் படி மிரட்டி வருகின்றனர்.

இணைய மறுத்தால் அத்துமீறி இணைப்பு கொடுப் போம். மறுக்கும் ஆபரேட்டர்களை கொல்லுவோம் என்று கொலை மிரட்டல் விடுப்பதாக கூறி உள்ளனர்.

மேலும் தங்களது உயிருக்கும் உடமைக்கும் பாதுகாப்பு அளிக்கும் படியும் தொலை பேசியிலும் நேரிலும் மிரட்டி வரும் மேற்கண்ட நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கும் படியும் பாதுகாப்பு கேட்டு புகார் அளித்துள்ளனர். மேலும் புகாரை சூளைமேடு காவல் நிலையத்திலும் அளித்துள்ளனர். புகார் சம்பந்தமாக இன்று கமிஷனர் திரிபாதியையும் சங்க நிர்வாகிகள் சந்திக்க உள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்