முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களை முதல்வர் திறந்துவைத்தார்

புதன்கிழமை, 25 ஜனவரி 2012      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, ஜன.25 - தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா நேற்று (24.1.2012) தலைமைச் செயலகத்தில், ஒப்படைக்கப்பட்ட வருவாய் மூலம் 7 கோடியே 84 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள ஐந்து ஊராட்சி ஒன்றிய அலுவலகக் கட்டடங்களைக் காணொலி காட்சி  மூலம் திறந்து வைத்தார். தமிழகத்தில் உள்ள பல்வேறு ஊராட்சி ஒன்றிய அலுவலக கட்டடங்கள் பயன்படுத்த முடியாத அளவிற்கு மிகவும் பழுதடைந்து உள்ளதையடுத்து, ஒப்படைக்கப்பட்ட வருவாய் மூலம் ஐந்து ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களுக்குக் கட்டடங்கள் கட்ட தமிழ்நாடு அரசால் நடவடிக்கை எடுக்கப்பட்டு, அதன் பணிகள் தற்போது முடிவடைந்துள்ளன.     

இதன்படி, தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசத்தில் 1 கோடியே 49 லட்சம் ரூபாய் செலவில் கட்டி முடிக்கப்பட்டுள்ள ஊராட்சி ஒன்றிய அலுவலகக் கட்டடத்தையும்,  பட்டுக்கோட்டையில் 1 கோடியே 95 லட்சம் ரூபாய் செலவில் கட்டி முடிக்கப்பட்டுள்ள ஊராட்சி ஒன்றிய அலுவலகக் கட்டடத்தையும், திருப்nullர் மாவட்டம், அவிநாசியில் 1 கோடியே 50 லட்சம் ரூபாய் செலவில் கட்டி முடிக்கப்பட்டுள்ள ஊராட்சி ஒன்றிய அலுவலகக் கட்டடத்தையும், பல்லடத்தில் 1 கோடியே 50 லட்சம் ரூபாய் செலவில் கட்டி முடிக்கப்பட்டுள்ள ஊராட்சி ஒன்றிய அலுவலகக் கட்டடத்தையும், தர்மபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டியில் 1 கோடியே 40 லட்சம் ரூபாய் செலவில் கட்டி முடிக்கப்பட்டுள்ள ஊராட்சி ஒன்றிய அலுவலகக் கட்டடத்தையும், ஆக மொத்தம் 7 கோடியே 84 லட்சம் ரூபாய் செலவில் புதிதாக கட்டப்பட்டுள்ள ஐந்து ஊராட்சி ஒன்றிய அலுவலகக் கட்டடங்களை தமிழக முதலமைச்சர்  ஜெயலலிதா நேற்று தலைமைச் செயலகத்தில் காணொலி காட்சி  மூலம் திறந்து வைத்தார்.

இந்நிகழ்வின்போது,  நகராட்சி நிர்வாகம் மற்றும் ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர், வீட்டுவசதி மற்றும் நகர்ப்புர வளர்ச்சித் துறை அமைச்சர், உயர்கல்வித் துறை அமைச்சர், தலைமைச் செயலாளர், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை முதன்மைச் செயலாளர் மற்றும் உயர் அலுவலர்கள் உடனிருந்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago