முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கோவை குடிநீர் திட்டம்: முதல்வர் திறந்து வைத்தார்

புதன்கிழமை, 25 ஜனவரி 2012      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, ஜன.25 - தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா நேற்று (24.1.2012) தலைமைச் செயலகத்தில், கோயம்புத்தூர் மாநகராட்சியின் சார்பில் 113 கோடியே 74 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள பில்லூர் இரண்டாவது குடிநீர் திட்டத்தை காணொலிக் காட்சி மூலமாக துவக்கி வைத்தார். மேலும், 96 கோடியே 51 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள உக்கடம் ​ திடக்கழிவு மேலாண்மை குப்பை மாற்று நிலையத்தையும் திறந்து வைத்தார்.

கோயம்புத்தூர் மாநகராட்சியின் வளர்ந்து வரும் மக்கள் தொகை மற்றும் விரிவாக்கம் செய்யப்பட்ட மாநகராட்சிப் பகுதிகளின் குடிநீர்த் தேவையினை கருத்திற் கொண்டு, ஜவஹர்லால் நேரு தேசிய நகர்ப்புர புனரமைப்பு திட்டத்தின் மூலம் 113 கோடியே 74 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் பில்லூர் இரண்டாவது 125 எம்.எல்.டி.  குடிநீர்த் திட்டம் துவக்கப்பட்டுள்ளது.  பில்லூர்​2 குடிநீர்த் திட்டப் பணிகளின் கீழ்,   இயல்பு நீர் கொணரும் குழாய் 1500 மிமி விட்டம்,  125 எம்எல்டி திறனுள்ள குடிநீர் சுத்திகரிப்பு நிலையம்,  சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் கொணரும் குழாய் மற்றும் 30 இலட்சம் லிட்டர்  கொள்ளளவு கொண்ட பிரதான நீர் சேரிகரிப்புத் தொட்டி ஆகிய பணிகள் நிறைவேற்றப்பட்டுள்ளன. தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்திலிருந்து 30 எம்எல்டி குடிநீரை பெற்று பில்லூர்​2 திட்டம் தற்போது பயனுக்கு கொண்டு வரப்படுகிறது. தற்போது கோயம்புத்தூர் மாநகராட்சியில்  விரிவாக்கப்பட்ட பகுதிகள் மற்றும் குடிர் பற்றாக்குறையுள்ள பகுதிகளுக்கு இதன் மூலம் குடிர் கிடைக்கும்.  இத்திட்டத்தின் மூலம் கோயம்புத்தூர் மாநகராட்சியைப் பகுதியைச் சேர்ந்த 4 லட்சத்து 50 ஆயிரம் மக்கள் பயனடைவார்கள்.  

மேலும், கோயம்புத்தூர் மாநகராட்சியில் ஜவஹர்லால் நேரு தேசிய நகர்ப்புர புனரமைப்புத் திட்டத்தின் கீழ் 200 மெட்ரிக் டன் குப்பை கையாளும் விதமாக, 2 கோடியே 50 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் 2.40 ஏக்கர் பரப்பளவில்  கட்டப்பட்டுள்ள உக்கடம் குப்பை மாற்று நிலையத்தை தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா நேற்று காணொலிக் காட்சி மூலமாக துவக்கி வைத்தார்.   இக்குப்பை மாற்று நிலையத்திற்கு மாநகராட்சியில் உள்ள 20 வார்டு பகுதிகளிலிருந்து குப்பைகள் கொணர்ந்து சேகரிக்கப்பட்டு அதன் பின்னர் அவை வெள்ளலூர் பகுதியில் கட்டப்பட்டுள்ள உரக்கிடங்கிற்கு கொண்டு செல்லப்படும்.

இந்நிகழ்வின்போது, நகராட்சி நிர்வாகம் மற்றும் ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர், தலைமைச் செயலாளர், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் கூடுதல் தலைமைச் செயலாளர் மற்றும் உயர் அலுவலர்கள் உடனிருந்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்