முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அமைச்சர் உறவினர் கொலை: ராமதாஸ் சகோதரர் கைது

புதன்கிழமை, 25 ஜனவரி 2012      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, ஜன.26 - தமிழக அமைச்சர் சி.வி.சண்முகத்தின் உறவினர் கொலை வழக்கில் பாமக நிறுவனர் ராமதாஸ் சகோதரர் சீனிவாசன் மற்றும் அக்கட்சியின் முன்னாள் தலைமை நிலைய செயலாளர் கருணாநிதி ஆகியோர் நேற்று  கைது செய்யப்பட்டனர். திண்டிவனத்தில் உள்ள அமைச்சர் சி.வி. சண்முகம் வீட்டில் கடந்த 2006 ஆம் ஆண்டு சட்டசபைத்தேர்தல் ஓட்டுப்பதிவு அன்று பாமக வினர் புகுந்து அங்கிருந்தவர்களை தாக்கினர். இதில் அமைச்சரின் உறவினர் முருகானந்தம் கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக பாமக நிறுவனர் ராமதாஸ், அவரது மகன் அன்புமணி மற்றும் பலர் மீது திண்டிவனம் போலீசில் சண்முகம் புகார் அளித்தார். ஆனால் போலீசார் ராமதாஸ் மற்றும் அன்புமணி ஆகியோரது பெயர்களை விட்டுவிட்டு மற்றவர்கள் மீது வழக்கு பதிவு செய்து 11 பேரை கைது செய்தனர். இந்நிலையில் ராமதாஸ், அன்புமணி ஆகியோரது பெயர்கள் சேர்க்கப்படாததை எதிர்த்து, இது குறித்து சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் எனக்கோரி சென்னை உயர் நீnullதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் nullநீதிமன்றம்,சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டது.

அதன்படி விசாரணையை தொடங்கிய சிபிஐ, இந்த வழக்கு தொடர்பாக பலரை கைது செய்திருந்தது. கைது செய்யப்பட்டவர்களில் ஒரு சிலர் சிபிஐ போலீஸ் காவலில் எடுக்கப்பட்டு விசாரிக்கப்பட்டனர். இதில் பெறப்பட்ட வாக்குமூலத்தின் அடிப்படையில், மேற்கூறிய கொலை வழக்கு தொடர்பாக பாமக நிறுவனர் ராமதாஸ் சகோதரர் சீனிவாசன் மற்றும் அக்கட்சியின் முன்னாள் தலைமை நிலைய செயலாளர் கருணாநிதி ஆகியோரை சிபிஐ நேற்று  கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட இருவரும் செங்கல்பட்டு முதன்மை செசன்ஸ் nullநீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். அவர்களை பிப்ரவரி 2 ஆம் தேதி வரை நீnullதிமன்ற காவலில் வைக்க nullநீதிபதி உத்தரவிட்டதையடுத்து, இருவரும் புழல் சிறையில் அடைக்கப்பட்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்